பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வழக்கு 7 சென்னை உயர் நீதிமன்றம் கனம் நீதிபதி கைலாசம் அவர்கள். மனுதாரர்: எம். மணி, எதிர்மனுதாரர்கள்: ஏ. செல்லமுத்து, எலக்ஷன் டிரிபியூனல், அரியலூர், விஷயம் பஞ்சாயத்துச் சட்டம், 25 (1) பிரிவின்கீழ் ஒழுக்கத் தவறு-விலைவாசி எதிர்ப்புப் போராட்டத் gf6 5605ğı 63rsirg5ğ6ö-[Moral Deliquency] ஒழுக்கத் தவருகுமா? வழக்கின் சுருக்கம் மனுதாரர் (மணி) அரியலூர் பஞ்சாயத்துக்கு 11-வது வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர். முதலாவது எதிர்மனுதாரரும் அதே பஞ்சாயத்துக்கு 6-வது வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர். அவர் அரியலூர், ஜில்லா முன்சீப் கோர்ட்டில் பஞ்சாயத்துச் சட்டம் 28 (1) பிரிவின்கீழ் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த மனு தாரர் (மணி) 19.7.62ல் அரசாங்க அதிகாரிகளுக்கு இடை யூறு விளைவிக்கும் நோக்கத்தோடு, சட்ட விரோதமாகச் சிலரோடு சேர்ந்து கொண்டு, அரியலூர் R.D.C. அலுவலகத் தின் வாயிலில் உட்கார்ந்து கொண்டு, அதிகாரிகள் உள்ளே செல்ல முடியாதவாறு தடுத்ததாயும், அவ்வாறு செய்ததால் இ.பி.கோ 143-வது பிரிவின்கீழும் கிரிமினல் சட்ட திருத்த மசோதா (1932) 7. (1) (a) பிரிவின் கீழும் குற்றங்களேப் புரிந்திருப்பதாயும், அந்தக் குற்றத்துக்காக மனுதாரர் விசா ரிக்கப்பட்டு, மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவின்கீழும் இரண்டு மாதங்கள் கடுங்காவல் தண்டனே விதிக்கப்பட்டதாயும், மேற் சொல்லிய குற்றம் ஒழுக்கத் தவருகக் கருதப்பட வேண்டும் என்றும், எனவே, மனுதாரர் பஞ்சாயத்து அங்கத்தினராக இருக்கத் தகுதி அற்றவர் என்றும் வாதாடப்பட்டது. மேற் சொன்ன வாதங்களே ஏற்றுக் கொண்டு, அரியலூர் முன்சீப், (தேர்தல் நீதி மன்றம்} மனுதாரர் பஞ்சாயத்து அங்கத்தினராக இருக்க தகுதி அற்றவர் என்று முடிவு செய்தார். அந்த உத்தரவை ஆக்ஷேபித்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. VI—2