#8 தீர்ப்பின் சாரம் மனுதாரர் (மணி) மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக் கின் குற்றப்பத்திரிகையில் மனுதாரரும் மற்றும் சிலரும், அர சாங்கத்துக்கு எதிராக, விலே வாசி உயர்வைக் கண்டித்து கிளர்ச்சி செய்ததாயும், அதையொட்டி அரியலூர் R.D.0. அலுவலகத்தின் முன் உட்கார்ந்து கொண்டு அதிகாரி களுக்கு இடையூறு விளைவித்து, கோஷங்களைப் போட்ட த்ரியும் காண்ப்படுகிறது. மனுதாரர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிருர் ஆல்ை, அவருடைய குற்றம் ஒழுக்கத் தவறு என்று தீர்மானிக்கப்பட முடியுமா என்பதுதான் இந்த வழக்கின் கேள்வி. - - பஞ்சாயத்துச் சட்டத்தின் 25-வது பிரிவு, கிரிமினல் நீதி டின்றத்தால் ஒழுக்கத் தவறன_குற்றத்துக்காக தண் டிக்கப்படுபவரை, அங்கத்தினராக இருக்கத் தகுதி அற்ற வர் என்று கூறுகிறது. ஆல்ை, அந்தப் பிரிவு, கிரிமினல் கோர்ட்டுகளால் தண்டிக்கப்படுகிற எல்லா நபர்களேயும் தகுதி அற்றவர்களாக்கவில்லே. ஒழுக்கத் தவறு சம்பந்த மான குற்றங்களுக்கு தண்டனே அடைந்திருக்க வேண்டியது அவசியம் எ ன் று குறிப்பிடுகிறது. ஒழுங்கீனமானவர் என்ற சொல், குற்றம் புரிந்தவரையோ அல்லது குற்ற வாளியையோ குறிக்கிறது. நன்னடத்தைக்குப் புறம்பான செய்கையே ஒழுங்கீனம் என்று பொருள்படும். விலே வாசி உயர்வை எதிர்த்துச் செய்யப்படும் கிளர்ச்சி ஒழுங்கீனமானது என்று கருதப்பட முடியுமா என்பதை தீர்மானிப்பது இந்த வழக்குக்குப் போதுமானது. மனுதாரர் ஒழுங்கீனமாக நடந்திருக்கிருர் என்று தீர் மானிக்க வேண்டுமானல், நன்னடத்தைக்குப் புறம்பான செய்கையைப் புரிந்திருக்கிருர் என்று தீர்மானிக்க வேண்டி வரும். விலை வாசி உயர்வை எதிர்த்து செய்யப்படும் கிளர்ச்சி அவசியமானதாலுைம் அவசியமற்றதாலுைம் ஒழுங்கீனமானது என்று சொல்லிவிட முடியாது. கிளர்ச்சி செய்யும்போது, ஏதாவது ஒரு சட்டத்தை மீறில்ை, மனு தாரர் தண்டனை பெற்றுவிடுவார். ஆல்ை, இது ஒழுக்கத் தவறுக்குச் சம்பந்தப்பட்டது அல்ல அதற்கு மாருக முடிவு செய்தால், எந்த விதமான கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களும் ஒழுக்கத் தவறு என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். ஆகவே, மனு அனுமதிக்கப்பட்டு, தேர்தல் நீதிமன்றத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. - [W. P. No. 4874/65]
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/897
Appearance