பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வழக்கு: 8 சென்னை உயர் நீதிமன்றம். கன்ம் பிரதம நீதிபதி அனந்த நாராயணன் அவர்கள். கனம் நீதிபதி நடேசன் அவர்கள். அப்பீல் மனுதாரர் : குமாரசாமிக் கவுண்டர். எதிர் மனுதாரர்கள் : கோவை ஜில்லா துணைக் கலெக்டர், மற்றவர்கள். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம், 27,28-வது பிரிவுகளின் கீழ் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் காரணமாக விலக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்-அந்த தீர்' மானம் சரி இல்லே எனில், அதற்குப் பரிகாரம் தேட வேண்டிய முறை என்ன? வழக்கின் சுருக்கம் குமாரசாமிக் கவுண்டர் (அப்பீல் மனுதாரர்) உக்கரம் பஞ்சாயத்து தலைவர். அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அங்கத்தினர்களில் நால்வர், தொடர்ந்து மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள். ஆதலால்,மேற்படி தீர்மானம் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று தலைவர் தாசில்தாரிடம் ஆகேஷபித்திருக்கிறர். அந்த ஆகேஷபனேயை தாசில்தார் நிராகரித்து விட்டார். அதன் பின்னர் தலைவர் ரிட் மனு தாக்கல் செய்தார். - நீதிபதி கனம் ரீநிவாசன் அவர்கள், தம்முடைய தீர்ப்பில், தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு சம்பந்தப் பட்ட அங்கத்தினர்கள் வரவில்லே என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார். அத்துடன் ரிட் அதிகார வரம்பின்கீழ் உயர் நீதிமன்றம் தலையிடுவதற்கு இல்லே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார். அதன் பின்னர், ரிட் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது