பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தீர்ப்பின் சாரம் ஒரு சட்டத்தின்கீழ் இதுபோன்ற சர்ச்சையை தீர்மானிப் பதற்கு வகை செய்யப்பட்டிருக்கும் போது, பாதிக்கப்பட்ட தாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு நபர், அரசியல் நிர்ணயச் சட்டம் 226-வது பிரிவின்கீழ், இந்த நீதிமன்றத்தின் பரிகா ரத்தை தேடி வருவது பொருத்தமற்றதாகும். பஞ்சாயத்துச் சட்டம் 28, (1) பிரிவைக் குறிப்பிடுவதே போதுமானதாகும். அதில், ஒரு அங்கத்தினரின் தகுதி இன்மை சம்பந்தமான சச்சரவை தீர்மானிக்கவும் அதன் பின், நீதி பரிபாலன அதிகாரியை அணுகி பரிகாரம் தேடவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரியின் முடிவு இறுதியானது என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களால், மனுதாரர் இந்த நீதி மன்றத்தை அணுகி, ரிட் அதிகார வரம்பின்கீழ் விசாரணை நடத்தி பரிகாரம் கேட்பது சரியாகாது. அப்பீல் ஏற்றுக் கொள்ளவே தகுதியற்றது அல்ல. உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. [W. A. No. 375/64. L.W. 78. 1963