உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 5 அவற்றைச் செயல்முறைக்குக் கொண்டு வருவதும், சட்ட ரீதியில் ஒழுங்கு செய்வதும் நிர்வாக அதிகாரியின் பொறுப்பு. அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி. 58. நிர்வாக அதிகாரி விருப்பம்போல் எதையும் செய்யலாமா ? பஞ்சாயத்தின் அனுமதியுடன் செய்ய வேண்டிக வேலையை அவசர ஆந்தர்ப்புத்தில் அல்லது போது, நலனுக்கு உகந்ததாக அது இருந்தால் அரசாங்கத்தின் நிர்ணயிக்கப் பட்ட விதிகளுக்கு உட்பட்டு தாமே அந்த வேலையைச் செய்ய நிர்வாக அதிகாரி உத்தரவிடலாம். 岛 இந்த வேலைக்கு ஆகும் செலவைப் பஞ்சாயத்து நிதியி லிருந்து கொடுக்கும்படி கட்டளையிடலாம். இவ்வாறு தாம் செய்ய நேர்ந்த காரணம் குறித்து திர்வாக அதிகாரி, பஞ்சாயத்தின் அடுத்த கூட்டத்திலேயே தெரிவித்துவிட வேண்டும். 59. நிர்வாக அதிகாரி தலைவருக்கு கட்டுப் பட்டவரா ? நிர்வாக அதிகாரி பஞ்சாயத்தில் சம்பளம் பெறுகிறவர். பஞ்சாயத்து தலைவரோ எவ்வித சம்பளமும் வாங் காதவர். நிர்வாக அதிகாரி அரசாங்கத்தாரால் நியமிக்கப் படுகிறவர். தலைவரோ பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர், நிர்வாக அதிகாரி பஞ்சாயத்துத் தலைவருக்கு அடங்கி நடக்கவேண்டியவரும் இல்லை. பஞ்சாயத்துத் தலைவர் நிர்வாக அதிகாரி மீது அதிகாரம் செலுத்த வேண்டியவரும் இல்லை. பஞ்சாயத்து நிர்வாகம் நன்ருக நடைபெற வேண்டு மானுல் இருவரும் ஒத்துழைக்க வேண்டும். குடும்ப நலத்திலே சம அக்கறையுள்ள கணவனும் மனைவி யும் போன்றவர்கள் இந்த இருவரும். ஆளுல், நிர்வாக அதிகாரியானவர் பஞ்சாயத்தின் துலனுக்கு மாருக நடப்பாராளுல், தலைவரும் துணைத்தலைவரும் இதர அங்கத்தினர்களும் சேர்ந்து அவரை மாற்றும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளலாம்.