பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2í வழக்கு: 9 சென்னை உயர் நீதிமன்றம். கனம் பிரதம நீதிபதி சந்திரா ரெட்டி அவர்கள். கனம் நீதிபதி ராமமூர்த்தி அவர்கள். - மனுதாரர் : ஜோதி கிருஷ்ணத் தேவர். எதிர் மனுதாரர்கள்: ஜாயிண்ட் டெவலப்மெண்ட் கமிஷனர், இதரர்கள். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 2. (15), 3. (2), 157. (5) பிரிவுகளின்கீழ் இன்ஸ்பெக்ட்ரின் அதிகாரங் கள்-மேலதிகாரம் என்ருல் என்ன? வழக்கின் சுருக்கம் தஞ்சாவூர் ஜில்லா, தெலுங்கன்குடிக்காடு வாசி ஒரு வர், பஞ்சாயத்து சட்டம் 3 (2) பிரிவின்கீழ், சென்ன்ை ஜாயிண்ட் டெவலப்மெண்ட் கமிஷனர், மேற்படி தெலுங்கன் குடிக்காடு கிராமத்தை இரண்டு பஞ்சாயத்துகளாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட்டதை ரத்து செய்யும்படி கோரு கிருர். தெலுங்கன்குடிக்காடு பஞ்சாயத்தில் தெலுங்கன் குடிக்காடு கிராமமும் ஒரத்தன்குடிக்காடு கிராமமும் அடங்கியுள்ளன. மேற்படி இரண்டு கிராமத்தார்களிடையே நிலவி வந்த கடும் விரோதத்தாலும் பகைமையாலும், தஞ்சை ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, (R,D.C.) ஜாயிண்ட் டெவலப் மெண்ட் கமிஷனருக்கு, ஒரத்தன்குடிக் காடை தெலுங்கன் குடிக்காடு பஞ்சாயத்திலிருந்து நீக்கி விடுமாறு ஆலோசனை கூறினர். அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டது. பிறகு, ஜாயிண்ட் டெவலப்மெண்ட் கமிஷனர் மேற்படி 3. (2) (D) பிரிவுப்படி, ஏன் பிரிவினை செய்யக்கூடாது என்று தெலுங்கன்குடிக்காடு பஞ்சாயத் துக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேற்படி பஞ்சாயத்தி லிருந்து ஆக்ஷேபனேகள் அனுப்பப் பட்டன. அவற்றை பரிசீலித்துவிட்டு, ஜாயிண்ட் டெவலப்மெண்ட் கமிஷனர் பிரிவினே சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டார். அதை ஆக்ஷேபித்து, அந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.