உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வழக்கு: 12 சென்னை உயர் நீதிமன்றம். கனம் நீதிபதி வீராசாமி அவர்கள். மனுதாரர்: A. A. முத்துசாமி ராஜா எதிர்மனுதாரர் : கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியன் . சார்பில் கமிஷனர். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 100-தனியார் மார்க்கட் வைத்து நடத்துவதற்கு, பஞ்சாயத்து யூனியன் வழங்கும் லேசென் ஸ்குக்காக் விதிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க பஞ்சாயத்து யூனியனுக்கு எத்தகைய அதிகாரம் உண்டு? வழக்கின் சாரம் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அதிகார வரம்புக்கு உட்பட்ட நயினர் அக்கிரகாரம் என்னும் கிராமத்தில், மனுதாரர் ஒரு வாராந்திர மார்க் கட்டை நடத்தி வருகிருர். இது 1882-ம் வருஷத்திலிருந்தே நடந்து வருகிறது. 1957ல் மனுதாரர் இதை கிரயத்துக்கு வாங்கினர். முன்பு ஜில்லா போர்டிடம் இருந்த இந்த மார்க் கட்டை நடத்த வருஷா வருஷம் லேசென்ஸ் பெற்று நடத்தி வந்தார். கடைசியாக, ஜில்லா போர்டு விசேஷ அதிகாரி, 13-11-1959ல் அந்த மார்க்கட்டின் ஒரு வருஷ மொத்த வசூலில் 3, 2% தொகையை லேசென்ஸ் கட்டணமாக விதித் தார். அதாவது மனுதாரர் அப்போது செலுத்திய லேசென்ஸ் கட்டணம் ரூ 44.2.42. 1960, அக்டோபரில் கடையநல்லுர ரில் பஞ்சாயத்து யூனியன் அமைக்கப்பட்டது. 28.3 1962ல் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கூட்டத்தில் மேற்படி லேசென்ஸ் கட்டணத்தை 1-4-61லிருந்து 12% விகிதத்துக்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. அ த வது மனுதாரர் செலுத்த வேண்டிய லேசென்ஸ் கட்டணம் ரூ. 1992 ஆக அதிகரித்தது. அதிகப்படியான இந்த லேசென்ஸ் கட்டண மானது மார்க்கட்டை நடத்த வழங்கும் வசதிகளுக்கும் சேவைகளுக்கும் ஏற்ப இல்லாமல் மிகவும் அதிகரித்து விதிக் கப்பட்டுள்ளபடியால் இதை ரத்து செய்யக் கோருகிருர், ‘. .