55 60. திர்வாக அதிகாரியின் அ லு வ ல் க f ல் தலேயிடலாமா ? "px திர்வாக அதி காரி யி ன் அன்ருட அலுவல்களில் பஞ்சாயத்து தலைவரோ, வேறு அங்கத்தினர்களோ தலையிடக் கி.பி.சி.இ. நிர்வாக அதிகாரி அரசாங்கத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். பஞ்சாயத்துத் தலைவர் கிராமப் பொதுமக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர். இருவரும் பரஸ்பரம் தலையிட்டால் ஒன்றுமே உருப் படியாக நடைபெருது. அவரவரும் தம் காரியத்தைச் சரி யாகவும் பொறுப்புடனும் செய்து கொண்டு சுமுகமாக நடந்துகொள்ள வேண்டும். தலைவருக்கும் நிர்வாக அதிகாரிக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால், இன்ஸ்பெக்டருக்கு எழுதி மேற்கொண்டு ஆக வேண்டியவற்றைக் கவனிக்கலாம். 51. நிர்வாக அதிகாரியின் உரிமைகள் எவை? பஞ்சாயத்து அல்லது அதன் கமிட்டி கூட்டங்களில் நிர்வாக அதிகாரி கலந்து கொள்ளலாம். விவாதத்தில் பங்கு கொள்ளவாமேயன்றி அங்கத்தினர் களைப் போல் தீர்மானம் கொண்டு வரவோ ஓட் அளிக்கவோ கூடாது. உடல் நலமில்லாததாலோ வேறு காரணங்களாலோ நிர்வாக அதிகாரி தமது அலுவல்களைக் கவனிக்க முடியாமல் இருக்கும்போது தலைவரே அவரது வேலைகளையும் கவனித்து வருவாா, 62. பஞ்சாயத்தைக் கலைக்கலாமா? ஒரு பஞ்சாயத்து தனது கடமைகளை வேண்டும் என்றே செய்யத் தவறினுலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் அரசாங்கம், குறிப்பிட்ட ஒரு தேதியிலிருந்து மேற்படி பஞ்சாயத்தைக் கலைத்துவிடல்ாம். பிறகு, இன்னொரு தேதி குறிப்பிட்டு அதை மாற்றி அமைக்கும்படி கட்டளையிடலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/91
Appearance