பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 தீர்மானம் செல்லுபடி ஆகாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தலைவரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பின் சாரம் நம்பிக்கை இல்லா தீர்மான்த்தைப் பற்றி ஆலோசிப் பதற்கான கூட்டத்தில், பிரிவு 152 (10)ல் விதிக்கப்பட்டி ருக்கும் தடையை மீறி, விவாதம் நடைபெற்றிருக்கிறது. 1. பதில் எவ்வித சந்தேகமும் இல்லே. இத்தகைய கூட்டத்தில், என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பது 152 (9) பிரிவில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கூ ட் ட த் தி ல் முதலில், தாசில்தார் தலைவர்மீது நம்பிக்கை இல்லை என்னும் பிரேரணையை வாசிக்க வேண்டும். பின்னர், தலைவர்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளே வாசிக்க வேண்டும். அதன் பின்னர்,தலேவர் எழுத்து மூலம் ஏதாவது வாக்குமூலம் கொடுத்திருந்தால் அதை வாசிக்க வேண்டும். முடிவில், தீர்மானத்தின்மீது நேரடியாக தீர்மானத்தின் பேரில் ஒட் எடுக்க வேண்டும். உட்பிரிவு (11)ன்படி, பிரேரினேயின் தராதரம் பற்றி தாசில்தார் பேசவோ, வாக்களிக்கவோ கூடாது. சட்டப் பிரிவின்படி எந்த விதமான பேச்சு, விசாரணை அல்லது விவாதம் எதுவும் நடத்தப்படக்கூடாது. இதற்கு முரணுக, விவாதம் நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகத்தெரிகிறது. விவாதம் நடத்தக் கூடாது என்பது தடையாகும் அதை மீறியதும், அதாவது விவாதம் நடத்திப் பட்டதும், அதன் பின்னர் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளுமே செல்லத்தக்கவை அல்ல. எனவே, மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அதன் மீது கலெக்டர் எடுத்த நடவடிக்கையும் ரத்து செய்யப்பட வேண்டும். - மனுவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. [W. P. No. 595/1962. L. W. 77. 306] ÄV–3