பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/913

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வழக்கு: 14 சென்னை உயர் நீதிமன்றம். கனம் பிரதம நீதிபதி ராமச்சந்திர அய்யர் அவர்கள். கனழ் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள். மனுதாரர்: ஜா. முகம்மது. எதிர்மனுதாரர் : திருத்துறைப்பூண்டி தாசில்தார். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம், பிரிவு 152 (4)-கிராமப் பஞ்சாயத்து காரியாலயத்தில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில், தலைவர் மீது நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லுபடி ஆகுமா ? வழக்கின் சுருக்கம் ஜா முகம்மது என்பவர் கொடிக்காடு பஞ்சாயத்து தலைவர். அவர் மீது, சில அங்கத்தினர்கள் நம்பிக்கையில்லா பிரேரனே கொண்டுவர ஏற்பாடு செய்தனர். அதன்படி பஞ்சாயத்துச் சட்டப் பிரிவு 152ன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி ஆலோசிப்பதற்காக, தாசில்தார் ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கான நோட்டீஸ் அனுப்பினர். அதில், கிராமத்தில் உள்ள கோவிலே கூட்டம் நடைபெறும் இடமாகக் குறிப்பிட்டார். மேற்படி கூட்டம் குறிப்பிட்ட தேதியில் கோவிலில் நடைபெற்றது. தலைவரும் மற்றும் எட்டு அங்கத்தினர்களும் மேற்படி கூட்டத்துக்கு வந்திருந் தனர். கூட்டத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி நிற்ைவேற்றப்பட்டது. பஞ்சாயத்துக்கு என்று சொந்த அலுவலகம் இருக்கிறது. கூட்டத்தை பஞ்சாயத்து அலுவல கத்தில் நடத்தாமல், வேறு ஒரு இடமான கோவிலில் நடத்தியதால் அதில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும், அதன்படி தலைவரை நீக்கிய அறிவிப்பும் சட்டப்படி செல்லுபடி ஆகாது என்று தலைவர் ஜா முகம்மது ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.