பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தீர்ப்பின் சாரம் பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவு 152(4)ல் கூட்டம் நடைபெற வேண்டிய இடம் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது : 'உட்பிரிவு (3)ன்கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸில் கண்ட, குறிப்பிட்ட காலம் கழிந்தவுடன் அந்தப் பிரே ர8ணயை ஆலோசிப்பதற்காக குறிப்பிடப்படும் தேதியில் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு கூட்டம் தாசில்தாரால் கூட்டப்பட வேண்டும்.” 'தாசில்தாரால் பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட்டப்பட வேண்டும்’ என்பது சட்டத்தின் கட்டளேயாகும். சட்டத்தின் நோக்கம், பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற வேண் டும் என்பது. அலுவலகம் இருக்கும்போது, கூட்டத்தைக் கூட்டுபவர் தம் இஷ்டம்போல் வேறு ஒரு இடத்தைக் குறிப் பிட முடியாது. அவ்வாறு வேறு ஒரு இடத்தைக் குறிப் பிட்டால் அங்கத்தினர்களுக்கு அசெளகரியம் ஏற்படுவ துடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் இடம் அளிக்கக்கூடும். பஞ்சாயத்து அலுவலகம் பழுது அடைந் திருப்பதாலும், சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும் கூட்டம் நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என்று கூறப் படுகிறது. சில சமயங்களில் கூட்டம் நடத்த முடியாமலும் போகலாம். ஆனால், சட்டத்தில், அலுவலகத்தில்தான் கட்டாயம் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் உள்ள குறைபாட்டுக்கு சட்டசபை பரிகாரம் காண வேண்டும், ஆல்ை, அப்பீல் மனுதாரர் கூட்டம் நடைபெற்றபோது இதைப்பற்றி எவ்வித ஆட்சேபணையையும் கிளப்பவில்லே. எனவே, ரிட் மனுவில் அதைப்பற்றி ஆட்சேபிப்பதை அனுமதிப்பதற்கு இல்லே. மனு தள்ளுபடி செய்யப்பட்டது. (11 м, 1. J. 300, 1964)