உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 7 தீர்ப்பின் சாரம் பிரிவு 15(4)ன்படி ஒரு பஞ்சாயத்துக்கு பெண் அங்கத் தினர் எவரும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், அந்தப் பஞ்சா யத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களிலிருந்து ஒரு பெண்ணே கூட்டுஅங்கத்தினராக பஞ்சாயத்து சேர்த்துக் கொள்ளலாம். பிரிவு 17(5)ன்படி அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட அங்கத்தினர் சாதாரண தேர்தலிலோ அல்லது தற்செயலான தேர்தலிலோ தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தால் எவ்வளவு காலம் பதவி வகிக்கலாமோ அதுவரை பதவி வகிக்கலாம். மேலும், சாதாரண அங்கத்தினருக்கு உள்ள எல்லா உரிமைகளும் கடமைகளும் அவருக்கும் உண்டு. அதனல், ஒருவரை கூட்டுஅங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ருல், தேர்தலைப் போலவே அபேட்சை மனு வரவழைக்கப்பட்டு, வாக்குப் பெட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சாதாரண விஷயத்துக்கான கூட்டத்தைப்போல தீர்மானம் நிறைவேற்றி தேர்ந்தெடுத் தது செல்லத்தக்கது அல்ல என்று மனுதாரர் சார்பில் வாதாடப்பட்டது. பிரிவு 15(5)ல் ஒரு அங்கத்தினரை தேர்ந்தெடுக்க?? வேண்டும் என்று கூறப்படவில்லே. தேர்தல்’ என்னும் சொல்லே உபயோகிப்பதை மிகவும் கவனமாகத் தவிர்க்கப் பட்டுள்ளது. சேர்த்துக் கொள்ளப்பட்ட அங்கத்தினர், மற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கத்தினர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளேயும் கடமைகளேயும் பெறலாம். ஆல்ை, அவரைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய முறை, தேர்தலைப் போல நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதற்கு சட்டப் பிரிவில் எந்தவித வாசகமும் இல்லே. எனவே, நாச்சாம் மாவை கூட்டு.அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப் பட்டதை ரத்து செய்வதற்கான முகாந்தரம் ஒன்றும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்பட்டது. tw. P. No. 865/1961, L. w. 77.452]