பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வழக்கு: 16 சென்னை உயர் நீதிமன்றம். கனம் நீதிபதி நடேசன் அவர்கள். மினுதாரர்: கிருஷ்ணமூர்த்தி அய்யர் எதிர்மனுதாரர்கள்: கோவிந்தசாமி பிள்ளையும் - மற்ருெருவரும். விஷயம் பஞ்சாயத்து சட்டம், 178-(2), 25 (2) (a) பிரிவுகள் 6, (2) (a). 6. (2) (F) விதிகள்-சிவில் புரோசீஜர்கோட் 151-ம் பிரிவு, உத்தரவு 11, விதி 12, உத்தரவு 13-தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத் தினர் குஷ்டரோகி என்றும் அதனுல் அருகதை இழந்தவர் என்றும் ஆட்சேப மனு தாக்கல் செய்யப் பிட்டால், தேர்தல் நீதிமன்றம் அவரை, அவ்வியாதி உள்ளவரா என்று தீர்மானிப்பதற்காக வைத்திய பரிசோதனே செய்து கொள்ளுமாறு உத்தரவிட முடியுமா ? வழக்கின் சுருக்கம் மனுதாரர் (கிருஷ்ணமூர்த்தி அய்யர்) முதல் எதிர்மனு தாரருடன் போட்டியிட்டு, பூரீமுஷ்ணம் நகரப் பஞ்சாயத்தின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருத்தாசலம் ஜில்லா முன்சீப் (தேர்தல் கோர்ட்) முன்பாக, முதல் எதிர் மனுதாரர் மனுதாரரின் தேர்தலே ஆட்சேபித்து மனுதாக்கல் செய்தார் அதில், மனுதாரர் குஷ்ட நோயால் பீடிக்கப் பட்டவர் என்றும் அதனால் பஞ்சாயத்துச் சட்டம் 25 (2) (a) பிரிவின் கீழ் அருகதை இழந்தவர் என்றும் குறிப்பிட்டார். அந்த மனுவை யொட்டி பஞ்சாயத்து விதிகள் 6. (2) (a) (f) கீழ் ஒரு விண்ணப்பம் போட்டார். அதில், மனுதாரர் கோர்ட் முன்பு உடல் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவருடைய ரத்தத்தை வைத்திய அதிகாரி பரிசோதிக்க வேண்டியிருக்கிறது என்றும் பரிசோதனையின் முடிவு குறித்து வைத்திய அதிகாரியை விசாரனே செய்ய