உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 திர்ப்பின் சாரம் பஞ்சாயத்து தி அங்கத்தினர்கள் இவர்களுக்கு மட்டுமே, தேர்தல் சரியானதா இல்லேயா என்பது பற்றிய சர்ச்சையை கிளப்ப உரிமையை அளித்திருக்கிறது. ஆனல், விதிகள், போட்டியிட்டு தோற்றவர்களுக்கும் வாக்காளர் களுக்கும். அந்த உரிமையை வழங்குகின்றன. இப்படி விதிகளின்கீழ் உரிமை தரப்பட்டிருப்பது பஞ்சாயத்துச் சட்டம் 28-வது பிரிவின் நோக்கத்துக்கு உடன்பாடானதல்ல என்றும் அந்தப் பிரிவுக்கும் தேர்தல் ஆட்சேபணைகளைத் தீர்மானிக்கும் விதிகளுக்கும் முரண்பாடு உள்ளது என்றும் வாதாடப்பட்டது. 28-ம் பிரிவைப் பார்க்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், பஞ்சாயத்து அங்கத்தினர்கள், பஞ்சாயத்து அதி காரிகள் அல்லது கமிஷனர் இவர்கள் மட்டுமே அந்தப் பிரிவில் கண்டுள்ள பரிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. மேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் தேதியில் அருகதையற்ற தன்மை இ ரு ந் தி ரு க் க வேண்டும். தேர்தலுக்கு முன்புள்ள நிலேமைக்கு அந்தப் பிரிவு சம்பந்தமற்றது. தவிரவும் நீதி பரிபாலன அதிகாரிக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தின்கீழ் ஒருவர் தகுதி இழந்தவரா அல்லது தகுதி இழக்காதவரா என்று அறிவிக்க மட்டுமே முடியும்.தேர்தலே ரத்து செய்யவோ, அல்லது மறுதேர்தலுக்கு உத்தரவிடவோ அதிகாரம் இல்லே. இது அந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ள பிரத் யேக பரிகாரமாகும். 28-வது பிரிவில், தேர்தலுக்கு முந்திய சர்ச்சைகளே தீர்மானிப்பதற்காக வகை செய்யப்படவில்லே. மேலும், 28-வது பிரிவைக் கொண்டு மட்டுமே தகுதியற்ற தன்மையை தீர்மானிக்குப்பட்டால் தீர்மானத்தை செயல் படுத்த முடியாது. எனவே, விதிகள் இயற்றி செயல்படுத்த சாதனம் தேவைப்படுகிறது. பஞ்சாயத்துச் சட்டம் 178-ம் பிரிவின்கீழ் விதிகள் இயற்றும் அதிகாரம் பெறப்படுகிறது.