பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 விதிகளேப் பார்க்கும்போது தேர்தலில் பரிசுத்தத் தன்மையில் அக்கறை கொண்டவர்கள், அதாவது வாக் காளர்கள் அல்லது போட்டி அபேட்சகர்கள் இவர்கள் தேர்தல், சட்டப்படி செல்லுமா செல்லாத்ா என்று சர்ச்சையை எழுப்ப முடியும். பஞ்சாய்த்துச் சட்டம் 28-வது பிரிவு, தேர்தல் விதிகள் 1. 11 (c) இவற்றின்கீழ் தேர்தலே ஆட்சேபித்து மனு தாக்கல் செய்வதற்கு தடை யாக இராது. இந்த நீதி மன்றம், புல்பெஞ்ச் தீர்ப்பு ஒன்றில் இதையே எடுத்துக் காட்டியுள்ளது. 'சட்ட சபையானது, போட்டி அபேட்சகர்களுக்கோ வாக்காளர்களுக்கோ உள்ள ஒரு தேர்தலே ஆட்சேபிக்கும் உரிமையை, வேறு பரிகாரங் கள் இருக்கின்றன என்ற காரணத்தால் பறித்து விட எண்ணியிருக்காது.’-இது அந்த தீர்ப்பின் சாரம், பஞ் சாயத்துச் சட்டம் 28-ம் பிரிவுக்கும் தேர்தலே ஆட்சேபிக் கும் சர்ச்சைகளே தீர்மானிப்பது சம்பந்தமான விதிகளுக்கும் முரண்பாடு இல்லே. மனு தள்ளுபடி செய்யப்பட்டது. [W, P. No. 1636/1965 L. W. 79.360.