பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 64. தகுதியற்ற்வர்களுடைய பிரச்னையை தீர் மானிப்பது எப்படி? தேர்தலுக்கு நிற்க முடியாதவர்கள் யார் என்று மேலே சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா? இது விஷயமாக சந்தேகம் ஏற்பட்டால், அல்லது யோக்கியதைய்ற்றவரெனக் கூறப்பட்ட் ஒருவர் ஆட்சேபணை செய்தால் என்ன் செய்வது? இத்தகைய பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு என்று ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். அவருக்கு இப்பிரச்னை குறித்து விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். இது விஷயமாக அவருடைய தீர்ப்பே முடிவானதாகும். 65. பட்ஜெட் தயாரிப்பது எப்படி? அரசாங்கத்தாருடைய நிதி வருஷம், ஒவ்வொரு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி மார்ச்சு மாதம் 31-ந் தேதி முடிவடையும். இதுவே பஞ்சாயத்துகளுக்கும் நிர்வாக வருஷமாகும். இந்த ஒரு வருஷத்துக்கான உத்தேச வரவு இனங்களையும், செலவினங்களையும் குறிப்பிட்டு ஒரு பட்ஜெட் தயாரிக்க வேண்டும். سم۔-- * பஞ்சாயத்துகள் விஷயத்தில், நிர்வாக அதிகாரி பட் ஜெட்டைத் தயாரித்து அங்கீகாரத்துக்காக சபை முன் வைக்க வேண்டும். சபையினர் உசிதமான திருத்தங்களைச் செய்த பின் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் அதை அப்படியே அனுமதிக்கலாம். அல்லது அவசியமான சில மாற்றங்களைச் செய்யலாம். 喷 责 實 பஞ்சாயத்து யூனிய்ன் கவுன்சில் பட்ஜெட்டை கமிஷனர் தயாரித்து கவுன்சில் முன் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அங்கீகரித்த பின் அரசாங்கத்தாருக்கு அனுப்பி அவர்கள் அனுமதியைப் பெற வேண்டும்.