59 நிலத்தின் பேரில் சர்க்கார் நிலவரி போடுகிறது அல்லவா? இந்த நிலவரியின் பேரில் ரூபாய்க்கு 45 காசுகள் என்ற கணக்குப்படி ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் பிரதேச வரியொன்றை விதித்து வசூலிக்க வேண்டும். இந்த பிரதேச வரித்தொகையில் ஒன்பதில் நான்கு பாகத்தை பஞ்சாயத்து யூனியன் கல்வி நிதியாக ஒதுக்கி, விட வேண்டும். மீதித் தொகையை குறிப்பிட்ட விதத்தில் யூனியனுக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும். அரசாங்கம் நிலவரி வசூல் செய்கிறதல்லவா? இதிலிருந் தும் பஞ்சாயத்து யூனியனுக்கும் பங்கு கிடைக்கிறது. ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியில் உள்ள மக்கள் தொகைக் கணக்குப்படி, ஒரு நபருக்கு ஒரு ரூபாய் வீதம் அரசாங்கம் நிலவரியிலிருந்து கொடுக்கிறது. பிரதேச கல்வி மான்யம் ஒன்றையும் பஞ்சாயத்து யூனியனுக்கு அரசாங்கம் கொடுக்கிறது. - ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் அதன் மக்கள் தொகையில் தலைக்கு 40 காக்கள் வீதம் கணக்கிட்டு பிரதேச சாலைகள் மான்யம் என்ற ஒன்றை அரசாங்கம் வழங்குகிறது. இந்தத் தொகை சாலைகளைப் பராமரிக்க செலவிடப்பட வேண்டும், திருவிழாக் காலங்களில் யாத்ரிகர் வரி விதித்து வஞ்லிக் கலாம். லைசென்ஸ் கட்டணங்கள், மார்க்கட்டில் வசூலிக்கும் கட்டணங்கள், மருந்துச் சாலைகளிலிருந்து கிடைக்கும் வருமானம், அரசாங்கம் தமாஷா வரி விதித்து வசூலிக்கிந்து அல்: லவா ? அதில் யூனியனுக்கு பங்கு கிடைக்கும். மீன்படி, தோணித்துறைகளில் விதித்து வசூலிக்கப்படும் கட்டணம், கடன்கள், பாக்கிகளின் மீது கிடைக்கும் வட்டி பாத்திய தையற்றி டெபாஸிட் தொகைகள் பறிமுதல், அபராதத் தொன்க்கள் ஆகியவை மூலம் வருமானம் கிடைக்கின்றது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/95
Appearance