பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} 69. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் கட்டாய கட்மைகள் யாவை ? ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் பிரதேச தேவையையும், நிதி நிலைமையையும் அனுசரித்து சில வேலை களைச் செய்தே தீரவேண்டும். பஞ்சாயத்து யூனியன் சாலைகளையும், அவற்றின் மேலுள்ள வாராவிதிகள், சிறு பாலங்கள், அணைகள் ஆகியவற்றை செப் பனிடுவது பராமரித்து வருவது. மருந்துச் சாலைகளை ஏற்படுத்தி நடத்த வேண்டும். தாய்-சேய் நல விடுதிகளை ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும், ஏழை விடுதிகள், கட்ட வேண்டும். அம்மை குத்துபவர்களுக்குப் பயிற்சியளித்து வேலை தர வேண்டும். வீட்டு மனைகளை ஏற்படுத்தி, ஜன நெரிசலைத் தவிர்க்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளை நடத்த வேண்டும். தனியார் நடத் தும் பள்ளிகளுக்கு மான்யம் கொடுக்க வேண்டும். தொத்து நோய்கள் வராமல் தடுக்கவும், ஏற்பட்டால் சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால் நடை மருத்துவ வசதி செய்ய வேண்டும். - பொது மார்க்கட்டுகளை ஏற்படுத்தி நடத்த வேண்டும். ஜனன மரணக் கணக்கைப் பதிவு செய்ய வேண்டும். குடிசைத் தொழில்களை வளர்த்து ஐக்கம் அளிக்க வேண்டும். யூனியன் எல்லைக்குள் எல்லோருக்கும் கட்டாயமாக அம்மை குத்தச் செய்ய வேண்டும். 70. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவருடைய கடமைகள் எவை ?