பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 பஞ்சாயத்து யூனியன்கவுன்சில் கூட்டங்களைக் கூட்டி ஒழுங்காக நடத்த வேண்டும். கவுன்சிலைச் சேர்ந்த சகல தஸ்தாவேஜுகளையும் பார்க்க வேண்டும். கவுன்சிலுக்கும், சர்க்காருக்கும் இடையே கடிதப் போக்கு. வரத்து தலைவர் மூலம்தான் நடத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் ஒவ்வொரு கமிட்டி யிலும் உத்தியோக முறையில் அங்கம் வகிக்க வேண்டும். சட்டப்படி தமக்குள்ள கடமைகளையும், அதிகாரங்களையும் 71. பஞ்சாயத்து யூனியன் பரிபாலன அறிக்கை தயாரிப்பது எப்படி? ஒவ்வொரு வருஷமும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் பரிபாலன அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். யூனியனிலுள்ள எல்லாப் பஞ்சாயத்துக்களிலிருந்தும் நிர்வாக அறிக்கைகள் வருமல்லவா ? அதை யெல்லாம் தொகுத்துச் சேர்த்த இணைந்த அறிக்கையாக அது இருக்க வேண்டும். - அந்த அறிக்கையைக் கமிஷனர் தயாரித்து கவுன்சில் முன் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சில் ஆலோசனை செய்து அது பற்றி நிறைவேற்றும் தீர்மானத்துடன் கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். 72. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அங்கத் தினர்கள் யார்? ஒரு பஞ்சாயத்து யூனியன் பிரதேசத்துக்குள் பல கிராமப் பஞ்சாயத்துக்கள் அடங்கி இருக்குது அல்லவா ? அத்தகைய கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் எல்லோரும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்கள். பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலில் பெண்கள் அல்லது ஷெடியூல்ட் வகுப்பினர் எண்ணிக்கை மூன்றுக்குக் குறையா மல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.