பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஒரு யூனியனுக்குள்_பட்டணப் பஞ்சாயத்துகள் இருக்கு மாளுல் அவற்றின் தலைவர்களும் பஞ்சாயத்து யூனியன் கவுன்வில் அங்கத்தினர்கள்தாம். அத்தொகுதியின் எம். எல். ஏ. தமது உத்தியோக முறையில் யூனியன் கவுன்சில் அங்கத்தினராக இருப்பார். 3. ஆனால், அவர் ஒட் அளிக்கவோ, தலைவராகத் தேர் தெடுக்கப்படவோ உரிமையற்றவர். த் 73. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர் களின் பதவிக்காலம் எவ்வளவு ? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்களுடைய பதவிக்க்ாலம் தமிழ் வருஷப் பிறப்பன்று தொடங்கி ஐந்து வருஷகாலம். இடையில் ஏற்படும் காலி ஸ்தானத்துக்குத் தேர்ந்தெடுக்

- - - - TamilBOT (பேச்சு) + تتسمي - கப்படுகிறவர் மீதமுள்ள காலத்துக்கே உதவி வகிக்க முடியும். 74. சேர்மன் டெலிகேட் என்ருல் என்ன பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுடைய தலைவர் அல்லது துணைத்தலைவர் தமது அலுவல்களேக் கவனிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம் நேரலாம் அல்லவா ? அப்போது தமது அலுவல்களைக் கவனிக்கும்படி கவுன்சில் அங்கத்தினர்களில் ஒருவரை எழுத்து மூலமாகத் தலைவர் கேட்டுக்கொள்ளலாம். இப்படி தலைவரிடம் அதிகாரம் பெற்று செயல்படுபவருக்கு சேர்மன் டெலிகேட் என்று பெயர். 75. கமிஷனர் என்பவர் யார் ? ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்காக அதன் நிர்வாகத்தைக் கவனிக்க அரசாங்கம் ஒரு கமிஷனரை நியமிக்கிருர்கள். கமிஷனர் சாதாரணமாக பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்காக, தேசிய விஸ்தரிப்பு சேவைத் திட்டத்தை அனு சரித்து நியமிக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரியாகவே இருப் பார். அப்போது அவரை பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி (B. D. C.) என்று சொல்லப்படும். -