§3 அவருக்குக் கொடுக்கப்படும் சம்பளம், அலவன்ஸ் ஆகிய வற்றிற்காக பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலிடமிருந்து எவ்வித தொகையும் வசூலிக்கக்கூடாது. அரசாங்கமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும். 76. கமிஷனருடைய அலுவல்கள் எவை? பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலில் பணியாற்றும் ஊழி யர்கள் எல்லோரும் அவருடைய மேல் விசாரணைக்கு உட்பட்ட வர்கள். அவர்கள் ஒழுங்கான முறையில் தங்கள் வேலைகளைச் செய்யும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்களை அமுலுக்கு கொண்டுவர வேண்டும். கவுன்சில் அல்லது அதன் கமிட்டிக் கூட்டங்களில் கலந்து கொண்டு விவாதிக்கலாம். ஆனல், தீர்மானம் கொண்டு வரவோ, ஒட்டளிக்கவோ முடியாது. கவுன்சிலின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அபிவிருத்தி சம்பந்தமாகவும், வரி வசூல் சம்பந்தமாகவும் குறிப்பிட்ட முறைப்படி முறை கவுன்சிலுக்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும். பஞ்சாயத்து சட்டப்படி காரியங்கள் எல்லாவற்றையும் சரியாக நிறைவேற்றுவதற்கு நேரடிப் பொறுப்பு விகிக்க வேண்டியவர் கமிஷனரே. - அவசியமான சந்தர்ப்பங்களில் கமிஷனர் தமது அலுவல் களில் சிலவற்றை எழுத்து மூலமான உத்தரவிஞல் கவுன்சிலின் இன்னுெரு உத்தியோகஸ்தருக்கு பிரித்துக் கொடுக்கலாம். அவசர சந்தர்ப்பங்களில் தாமாகவே செயலாற்ற பஞ்சா யத்தின் நிர்வாக அதிகாரிக்குள்ள அதிகாரங்கள் கமிஷனருக் கும்.உண்டு. 77. கலெக்டர் என்ன செய்ய வேண்டும்? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் தங்கள் பரிபாலன அறிக்கைகளைக் கலெக்டருக்கு அனுப்பி வைக்கின்றஅல்லவா ?
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/99
Appearance