பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


 "அப்படி, நான் என்ன அநாவசியமா செலவழிக்கிறேன்!" என்றுதனது நிரபராதத்தன்மையினால் ஏற்பட்ட தெம்புடன் கேட்டான் மணி

"அநாவசியமோ, அவசியமோ?செலவைச்சுருக்குன்னு நான் சொல்றேன் தெரிஞ்சிதா? நம்ம வீட்டுக்கு உன் செலவு தாங்காது!"

தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சம்வாதத்தைக் கேட்டு, அடுப்பங்கரையிலிருந்த தங்கம்மாள் அகப்பையும் கையுமாக விரைந்து வந்து குறுக்கிட்டாள்:

அவன் கிட்டே ஏன் போயி வாயைக் குடுக்கிய? நம்ம கஷ்டம் நம்மோடே புள்ளைக மனசை வேறெ புண்படுத் தணுமா?" என்று கணவனை நோக்கிக் கூறிவிட்டு, மகனிடம் திரும்பி, "மணி, நீ போடா மேலே" என்று கூறினாள் தங்கம்.

தங்கம்மாளின் குறுக்கீடு தந்தைக்கும் தனயனுக்கும் திதான புத்தியை வரவழைத்தது. மணி ஒன்றும் பேசாமல், வீட்டை விட்டு வெளியே சென்றான்; கைலாசமுதலியாரும்; மனச் சாந்தியை நாடி மாடியிலுள்ள தமது பூஜை அறைக்குள் சென்றார்.

பூஜை அறைக்குள் சென்று, அவரது நம்பிக்கைக்கும் பக்திக்கும் பாத்திரமான முருகப் பெருமானின் திருவுருவத்தின் முன்பு கண்மூடி, கைகூப்பி நின்று மனத்தை ஒரு நிலைப்படுத்த முயன்றும், அவரால் நிம்மதி பெற முடியவில்லை. 'நீளத்திரிந்து நின்றும் நீங்கா நிழல் போல' அவரை அலைக்கழிக்கும் சிந்தனைகள் அவரை மேலும் மேலும் வாட்டின. அந்தச் சிந்தனைகள் வகுத்த சக்கர வியூகத்தினூடே சிக்கித் தவித்து மனம் உளைத்தார் கைலாச முதலியார்.

எத்தனை நெருக்கடிகள்! எத்தனை கடன்கள்! வியாபாரம். இல்லையென்று தெரிந்தும், அந்தக்