பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


கொடும்பாவி தாதுலிங்க முதலியார். சமயம் பார்த்துக் கழுத்தை அறுக்கிறானே! பன்னிரண்டாயிரம் ரூபாயையும் ஒரு தேதியிலே பைசல் பண்ண வேண்டும் என்றால் என்னால் முடிகிற காரியமா?- அந்த மைனர் முதலியார் அவனாவது பொறுத்திருக்கிறானா? இருந் திருந்து அவனிடம் போய் ஏன் கடன் வாங்கினேன்? அந்தப் பயல் இழவுக்காக அரியநாயகிபுரம் பக்கத்திலிருந்த வயலைக்கூட அடமானம் வைத்தேனே_ இத்தனை கடன்களையும் எப்படி அடைக்கப் போகிறேன்?_ ஒண்ணா, ரெண்டா?_ முருகா என்கைள எப்படியப்பா மீட்கப் போகிறாய்? இந்தக் கவலையிலேயே என்னை உருக்கி உருக்கிக் கொன்று விடுவாய் போலிருக்கிறதே முருகா முருகா முருகா

கைலாசமுதலியரால் ஓரளவுகூட நிம்மதி பெற முடியவில்லை. சொறி சிரங்கு மாதிரி அரித்துப் பிடுங்கும் அந்தச் சிந்தனைகளை மேலும் மேலும் கிண்டிக் கிளறி, இதயத்தில் ரத்தம் சொட்டச் செய்து கொண்டாரே ஒழிய அதிலிருந்து மீளும் வழியை அவரால் காண முடியவில்லை. ஓரிடத்திலும் இருக்க நிலை கொள்ளாமல் தவித்த கைலாச முதலியார், சிறிது நேரத்தில் மீண்டும் கிழிறங்கி வந்து, பட்டறையில் போய் அமர்ந்தார். அவரது கை அவரையும் அறியாமல் பட்டறைப் பலகைக்கு அடியில் கிடந்த செய்தித் தாளை எடுத்தது; அவரது கண்களும் மனமும் ஏனோ அதே செய்திபை-நாமக்கல் ஏகாம்பர முதலியாரின் மரணச் செய்தியைத் தேடிப்பார்த்தன.


அதைப் படித்த போது மீண்டும் அவர் மனத்தில் பயபீதி உருவாயிற்று; கைகளும் மனமும் நடுங்கிச் சிலிர்த்தன.

"முதலாளி"

எதிர்பாராது வந்த அந்தக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார் கைலாச முதலியார்.ஏதோ செய்யத் தகாத காரியத்தைச் செய்யும் போது, கையும் மெய்யுமாகப்