பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


பிடிபட்டது போல் அவர் கலவரமுற்றுக் குழம்பினார்; அவசர அவசரமாக, தினசரிப் பத்திரிகையைப் பலகைக்கு அடியிலே தள்ளினார்; தள்ளிவிட்டுக் குரல் வந்த திசையில் தலையைத்திருப்பினார்.

எதிரே நின்றவரைக் கண்டதும், அவருக்கு நாக்கே உள்ளிழுத்துக் கொண்டது போல் இருந்தது. எமலோகத் திலிருந்து ஓலை கொண்டு வந்த கிங்கரனைப் போல் அவரெதிரே தா துலிங்க முதலியாரின் கணக்கப்பிள்ளை நின்று கொண்டிருந்தார்.

"கணக்கப்பிள்ளையா?" கைலாச முதலியாரின் குரல் கட்டிப்போய் அடைத்து ஒலித்தது;

"முதலாளி அனுப்பிச்சாக. உடனே பணம் வேணுமிண்ணு, கையோடே பணம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாக.ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சிக்கிட்டுவான்னு விரட்டிட்டாக" என்று பவ்வியத்தோடு கூறி நிறுத்தினார் கணக்கப்பிள்ளை.

கைலாச முதலியார் பரிதாபகரமாகப் பெருமூச்செறிந்தார்.

என்னகணக்கப்பிள்ளை? நம்மகஷ்டம் அவுகளுக்குத் தெரியாதா?"

"அதென்னமோ அவுஹ பாடு, உங்க பாடு" என்று மெட்டாகப் பேசி நிறுத்தினார் பிள்ளை.

கைலாச முதலியார், ஒரு நிமிஷ நேரம் ஒன்றுமே பேசவில்லை. பிறகு முருகா' என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டு, மடியிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து இரும்புப் பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து நோட்டுக்கட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணி முடித்தார்.

"இந்தாரும், இதிலே மூவாயிரம் இருக்கு; இதை கொண்டு குடுங்க, பாக்கிக்கு நான் வந்து தாக்கல் சொல்றதாகச் சொல்லுங்க" என்று கூறியவாறே நோட்டுக்