பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


 "கைலாச முதலியாரை இன்னம் சுத்தி வளைச்சு ஒரு பிடி பிடிச்சா, அவன் கிட்டேயுள்ள ஜவுளியையெல்லாம் கூட மலிவா விலைபோட்டு எடுத்துக் கிடலாம். பிழைப்பிலே மண்ணை வாரிப் போட்டதாகத் திட்டுவான் இந்தத் திட்டுக்கெல்லாம் பயந்தா, காரியம் நடக்குமா? வியாபாரத்திலே தர்ம நியாயம் பார்த்தா, அவனை மாதிரி விதியேன்னு தலையிலே கை வைக்க வேண்டியது தான். அந்த ஆறாயிரத்துச்சொச்சத்தையும் அவன் கிட' டேபிரிக்கிறவழியைப் பார்க்கணும். இருக்கிற நிலவரத்தைப் பார்த்தா எவனெவன் எந்த நிமிசத்திலே, ஐபி குடுப்பான்னு தெரியலெ. அது விசயமா வக்கீலுக்குத் தாக்கல் சொல்லணும்.

"வியாபாரமும் மின்னே மாதிரி இல்லெ. நூல் விலை ஏத்தமா இருக்கிறதாலே நம்ம பிஸினஸ் ஒரு வழியா ஓடிக்கிட்டிருக்கு. இல்லென்னா, ஆபத்துத்தான். ஏத்துமதிக்கு மட்டும் மின்னே மாதிரி இடமிருந்தா ஒரு தட்டுத் தட்டலாம். ஆனா, இந்த சர்க்கார் அதுக்குவேறே வரியைப் போட்டுத் தொலைச்சிட்டுது. சொல்லப்போனா, இந்த சர்க்கார் வெள்ளைக்காரன் சௌகரியத்தைக் கவனிக்கிற அளவுக்கு, நம்ம சௌகரியத்தைக் கவனிக்கக் காணோம். மில் துணிப் போட்டி வேறெ. லாபத்துக்குப் பங்கம் வராமப் பார்த்துக் கிடணும்னா, உழைக்கிறவன் தலையிலே கை வைக்கிறதை விட வேறே விதியில்லை. இப்ப இருக்கிற நிலைமையிலே இந்த சர்க்கார் இல்லேன்னா, இது கூட ஓடாது. ஆமா பூனைக்குப் பயந்து புலி வாயிலே விழக்கூடாது.

"சங்கரைப்பத்தி என்னென்னமோ பேச்சு காதிலே விழுது. இரணியனுக்குப் பிரகலாதன் பிறந்த மாதிரி, எனக்குன்னு வந்து பிறந்திருக்கு, இந்தத் தறுதலைக் கொள்ளி. அவனைக் கொஞ்சம் கண்டிச்சுவைக்கணும்."

தம்முள்ளே தாமாகி, தாமுக்குள் எல்லாமாய் முயங்கி நின்று, தாதுலிங்க முதலியார் ஆத்ம விசாரம் செய்து,