பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


நூலையெல்லாம் ஏறக் குறையன்னாலும் தள்ளி விட்டிருங்க" என்று உபதேசிக்கமுன்வந்தாள் தர்மாம்பாள்.

"இந்தா பாரு, தர்மா, வியாபாரமின்னா நாலும்தான் இருக்கும். அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறவரையிலே,கள்ள மார்க்கெட்டாவது, வெள்ளைமார்க்கெட்டாவது? எல்லாம் ஒரு எழவு மார்க்கெட்டுதான்" என்று கூறி, அத்துடன் பேச்சைச் சுருக்கிவிட்டு, "சரி வா, சாப்பிடப் போகலாம்" என்று கிளம்பினார்.

தர்மாம்பாளும் கணவனைப் பின்தொடர்ந்தாள்.

தாதுலிங்க முதலியார் சாப்பிட்டு முடித்துவிட்டு, வீட்டின் நடு ஹாலுக்கு வந்தார்; ஹாலின் மத்தியில் கிடந்த சோபாவின்மீது உட்கார்ந்து, கையிலிருந்த குச்சியால் பல்லைக் குத்திக் கொண்டிருந்தார்.. ஹாலுக்கு இடது புறமுள்ள அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது; எனினும் உள்ளே விளக்கெரிவது, கதவுக்கு மேலுள்ள வர்ணக் கண்ணாடியின் மூலம் தெரிந்தது. சிறிது நேரத்தில் ஒரு வெள்ளித் தம்ளரில் பால் கொண்டுவந்து தாதுலிங்க முதலியாரிடம் கொடுத்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்தாள் தர்மாம்பாள்.

தாதுலிங்கமுதலியார்பாலைக் கொஞ்சம் கொஞ்சமா ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, தம்ளரைக் கீழே வைத்தார்; ஒரு இளம் ஏப்பம் அவரது தொண்டையைத் தடவிவிட்டுக் காற்றில் கலந்தது.

"ஆமா, உங்களிடம் ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன், மறந்தே போச்சு" என்று ஆரம்பித்தாள் தர்மாம்பாள்.

"என்னது?"

"நேத்து கணக்கப் பிள்ளை மூலமா, கொடுத்தனுப் பிச்சிங்களே, நகை. அதென்ன, அடகுக்குவந்துதா?"

தாதுலிங்க முதலியார் பெருமிதத்தோடு பதில் கூறத் தொடங்கினார்.