பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


 "இந்தா பாரு, கமலா. உன் கலியாண விசயமாக அம்மா சொன்னாள். நீ அந்த எண்ணத்தை அடியோடே மறந்துடு நீ படிச்ச பொண்ணு; புத்திசாலி. உனக்கே தெரிய வேண்டாமா? நம்ம குடும்ப கௌரவமென்ன அந்தஸ்தென்ன? இருந்திருந்து ஒரு தறிகாரன் வீட்டுக்கா நீ மருமகளாகப் போவது...?"

தாதுலிங்க முதலியாரின் இந்தப் போதனையைக் கேட்டு கமலா தாக்குண்டாளெனினும், அவள் தடுமாறி விடவில்லை. தந்தையின் பேச்சினால் குழம்பிச் சிதறிய உணர்ச்சிகளையெல்லாம் அவள் ஒரு நிலைப்படுத்தி உறுதி செய்துகொண்டு, தந்தைக்குப் பதில் கொடுக்க விரும்பினாள். எனினும் அவள் எதிர்பார்த்த மாதிரி வாயிலிருந்து உட்னே வார்த்தைகள் பிறந்து விடவில்லை. தனது விருப்பத்துக்கெதிராக தன் வாழ்வையும் ஆசைக் கனவுகளையும் பாதிக்கும் விதத்தில் தன் தந்தை குறுக்கிட்டு நிற்பதை, அவளால் எடுத்த எடுப்பில் தடுத்துப் பேச இயலவில்லை. அவள் கண்களிலே கண்ணீர் மல்கிப். பெருகியது; துடிதுடிக்கும் உதட்டைப் பல்லால் அதுக்கிக் கடித்து உணர்வூட்டிக்கொண்டாள்.

கமலாவின் அந்த மௌன நிலையின் மர்மத்தை உணராதவராக, தாதுலிங்க முதலியார் "கமலா, போ. போய்ப் படி." என்று சாவதானமாகச் சொன்னார்.

ஆனால் கமலா போகவில்லை அதற்குப் பதிலாக, அவள் தந்தையை நிமிர்ந்து நோக்கினாள்; கண்ணில் பொக்கிய கண்ணீரைக் கைவிரலால் சுண்டி விட்டுக் கொண்டாள்; கணீரென்று ஒலிக்கும் . குரலில் பதில் சொன்னாள்:

"அப்பா, நான் மணி அத்தானைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்!"

தமது மகளின் தைரியத்தைக் கண்டு தந்தை ஒரு கணம்' மலைத்தார்.ஆனால் மறுகணமே அவரது ரோஷ உணர்ச்சி