பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


திருச்செந்தூர் போயிருக்காகளாம். அவுஹளைப் பத்திக் கவலை இல்லை. கூடக் குறையன்னாலும் மாட்டேன்னு சொல்லமாட்டாஹ" என்றார்வடிவேலு.

"என்ன வேமாப்ளேய், உசத்துஉசத்துன் னுநம்மபாட் டுக்குக் கேட்டுக்கிட்டேயிருந்தா, முதலாளிமாருங்கதான் என்ன செய்வாஹ? நூல் விலையோ நாளுக்கு நாள் ஏறிக்கிட்டிருக்கு.நாமும்கொஞ்சம் நிதானமாய் நடந்துக்கிட வேண்டாமா!"என்றுகுறுக்கிட்டார்சுப்பையா முதலியார்.

"வேய் உமக்கு என்ன, வயத்திலே பசியா, முட்டிலே பசியா?" என்று வெடுக்கென்று கேட்டுவிட்டு, வடிவேலு முதலியார் காரசாரமாகப் பேசத் தொடங்கினார்: "வே, உமக்கு இந்தப் பெரிய - மனுசன் புத்தி போகாது போலிருக்கே! மொதலாளிக்காகத் தாக்குப் பிடிச்சி உமக்கு என்னலாபம்? நீரும் தொள்ளாளி; நாங்களும் தொள்ளாளி. கூலியை இ.சத்திக் கேட்க வாயா வலிக்குது? நூல் விலை ஏறிக்கிட்டே போவுதுங்கிறிரே, அரிசி விலை மட்டும் இறங்கிக் கிட்டே போவுதோ? மொதலாளிக்கு. ஏண்டுக் கிட்டுப் பேசவாரீரே, உமக்கென்ன கிடைக்குது?ஏதாச்சும் அஞ்சுபத்துக்கிடைக்குதா?அதையாவது சொல்லும்!"

தொண்டையில் கூடிய, எச்சிலைக் கடுக்கென்று விழுங்கி விட்டு, ”அதுக்குச் சொல்லலே, பெரிய முதலாளி கூட அன்னைக்கிச் சொன்னாக வரவர யாபாரமே இல்லி யாம். ஏத்துமதியே அத்துப் போச்சாம். இந்தச் சமயத்திலே - போயி, கூலி உசத்துறதுன்னா." என்று தமது வாக்கைக் கொண்டு செலுத்த முனைந்தார் சுப்பையா முதலியார்.

பெரியமுதலாளிக்குஏத்தமும்இறக்கமும்வயித்தைப் பிடிக்கிற விவகாரமில்லையே. அவுஹ தடுக்கி விழுந்தா, தாங்குறதுக்கு பங்களா இருக்கு; கார் இருக்கு; லட்ச லட்சமாப்பணம்இருக்கு; வீடுவாசல்சொத்துசுகம்இருக்கு, நமக்கு என்னவே இருக்கு" என்று கூடவந்த நெசவாளி ஒருவர் கூறினார்.