பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



"அது சரிதான். எல்லாம் கைலாச முதவியார்வாள் வரட்டும்னு இருக்கேன், அவுஹ வந்ததும், மொத லாளிமாரையெல்லாம் ஒண்ணுகூட்டி, ஊர்க்கூட்டம் போட்டு ஒரு வழி செய்ய வேண்டியதுதான்" என்று தம் யோசனையை வெளிப்படுத்தினார்வடிவேலு.

இந்தச் சமயத்தில் திடீரென்று நாய் குலைக்கும் சத்தமும்,சைக்கிள்மணிச்சத்தமும் ஏககாலத்தில் ஒலித்தன. வடிவேலு முதலியார் தலையைத் திருப்பிப் பார்த்தார். எதிரே பத்திரிகைப் பையன் சைக்கிளில் - வந்து கொண்டிருந்தான், அவனுக்குப் பின்னால், நெருங்கவும் பயந்து கொண்டு, பின் வாங்கவும் கூசிக் கொண்டு, ஒரு கறுப்பு நாய் குலைத்துக் கொண்டே ஓடி வந்தது. சிறிது தூரம்ஓடிவந்துவிட்டு,அதுபின்தங்கிவிட்டது.

வாயில் புகையிலையோடு பொதுமி நின்ற வெற்றிலைக் கூழைப் புளிச்சென்று துப்பிவிட்டு, "அந்த நாயைக் கூடப் பாருங்க. அதுக்குக்கூட, அவர் புத்திதான் இருக்கு" என்று எரிச்சலோடு சொன்னார் வடிவேலு முதலியார்.

"அவரைப்பத்தி நாம் எதுக்கு வாயைக் குடுக்கணும்? வீண் பொல்லாப்புக்கா?" என்று பட்டும் படாமலும் வெட்டிப்பேசினார் சுப்பையா முதலியார்.

"அதுயார்நாய்?"என்றுதெரியாததுபோல்கேட்டார்இன்னொருவர்.

"எல்லாம் மைனர் முதலியார்வாளின் நாய்தான்! அதனால்தான் அதுக்குக்கூடக் கார்வார் ஜாஸ்தியாப் போச்சு!"என்றார் வடிவேலு.

'மைனர் முதலியார்' என்ற அருணாசல முதலியார், சுப்பையா முதலியாருக்குத் தூரத்து உறவு. சுப்பையா முதலியாரின் தந்தை கைத்தறி ஜவுளிக்கடைதான் வைத்திருந்தார். எனினும், சுப்பையா முதலியாருக்கு வயது