பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


வைத்திருக்கும் பெட்டியை இழுத்தார்; அதை இழுத்துப் பார்த்தபோதுதான் அவருக்கு நெஞ்சுபகீரென்றது.

பெட்டியில் ஏழே ஏழு ரூபாயும், கொஞ்சம் சில்லரையும் தான் இருந்தன!

அப்போதுதான் அவருக்கு முந்திய நாள் மாலை ஒரு பாக்கி வகைக்காக, ரூபாய் இருநூறு கொடுத்தது ஞாபகம் வந்தது; அவசரத்தில் அவர் அந்தப் பாக்கியை அடைத்து விட்டாரே ஒழிய, அந்தச் சமயத்தில் கையிருப்பு எவ்வளவு என்று கவனிக்கவில்லை; வேறுஎங்கேனும் ரூபாய் ஒதுங்கிக் கிடக்கிறதா என்று ஒவ்வொரு அறையாகத் துழாவித் துழாவிப்பார்த்தார்.ஆனால் இரும்புப்பெட்டி, பணத்தைப் பாதுகாத்துத்தான் தருமே ஒழிய, குட்டி போட்டுத் தருவதில்லையே!

'டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க இது போதும்' என்று தமக்குத் தாமே நம்பிக்கை ஊட்டியவராய், ஏழுரூபாயை எடுத்து இருளப்பக் கோளாரிடம் கொடுத்து, "சீக்கிரம் போய் இந்த மருந்து எங்கிருந்தாலும் உடனே வாங்கி வாரும்" என்று உத்தரவிட்டார்.

இருளப்பக் கோனார் சென்ற பிறகுதான் அவருக்குப் பல சந்தேகங்கள் எழுந்தன. ஒரு வேளை மருந்து கிடைக்கா விட்டால்? மருந்து கிடைத்தாலும் விலை அதிகமாயிருந்தால்?'

கைலாச முதலியார் இப்படித் தமக்குத் தாமே மனம் உளைந்து கலங்கிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கிங்கரக்குரல் திடீரென்று ஒலித்தது.

"என்ன"வே,கைலாசமுதலியார்! இருக்கே'ரா?"

ஸெண்ட் மணம் கமகமக்க, மைனர் முதலியார் அமுத்தலாக வந்து கைலாச முதலியாருக்கு எதிரே கிடந்த பெஞ்சின் மீது அமர்ந்தார்.

மைனர் முதலியாரைக் கண்டதுமே, கைலாச