பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


வருமுன்பே, அந்தக் கடை நொடித்துப் போய்விட்டது. அதன் பின்னர் அவரது தந்தை 'ஜவுளிக்கடை முதலாளி' என்ற அந்தஸ்திலிருந்து வழுக்கி விழுந்து, மீண்டும் தமது சமூகத் தொழிலான கைத்தறி நெசவில் அடைக்கலம் புகுந்தார். சுப்பையா முதலியாரும் தற்போது ஒரு நெசவுத் தொழிலாளரிதான், என்றாலும், ஜவுளிக்கடை வைத்து நடத்தியழைய பெருமையுணர்ச்சியும், மைனர் முதலியார் வாள் போன்ற பெரியதனக்காரரின் தூரத்துச் சொந்தக் காரர் என்ற ஒட்டுறவுணர்ச்சியும் அவர் மனத்தைவிட்டு அகலவில்லை. எனவே மைனர் முதலியாரைப்பற்றிச் சொன்னதும் அவருக்கு நெஞ்சில் சுருக்கென்றது.

"என்னவே மாப்பிளே. அவுஹ கோயில் தர்மகர்த்தா வாச்சி. அந்த மரியாதைக்குக்கூட, நீர் மதிப்புக் குடுக்கக் காணமே!"என்றுஅங்கலாய்த்தார்சுப்பையாமுதலியார்.

வடிவேலு முதலியார் விடுவதாக இல்லை.

"கோயில் தர்மகர்த்தாவா? கோயில்பெருச்சாளின்னு சொல்லும்லே. அவரு நினைச்சா அம்மன் கழுத்திலே கிடக்கிறபொட்டிலேகூடக்கைவைக்கிறவராச்சேஅப்புறம் நம்ம சொத்தைக் கேட்பானேன்" என்றார் வடிவேலு முதலியார்.

"அட சரித்தாம்வே. பேச்சை நிறுத்தும்; பேப்பர் வந்திட்டுது" என்று வெட்டி முறித்துப் பேசிவிட்டு, பத்திரிகைக்காரப் பையனிடம் தினசரிப் பத்திரிகையை எட்டி வாங்கினார் சுப்பையா முதலியார். பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தவாறே "பார்த்தீரா வே! நாக்பூரிலே ஒருத்திக்குக் குரங்குப் புள்ளே புறந்திருக்காம்!" என்று சுவாரசியத்தோடு சொன்னார்,

"சரிசரி பேப்பர் படிச்ச லெச்சணம் போதும்; இப்படிக் குடும்" என்று அதிகாரத் தோரணையோடு கூறிக்கொண்டே பத்திரிகையைக் கையில் வாங்கினார் வடிவேலு.