பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


கொண்டார். ஆனால் அவரது மனக் கதவை இழுத்து பாடுவதற்கோ அவருக்கு மார்க்கமே தெரியவில்லை...

திக்பிரமை பிடித்தது போல் வீற்றிருந்த கைலாச முதலியார் தங்கத்தின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தெழுந்தார்.

"உங்களைத்தானே, எந்திரிச்சதிலேயிருந்து பல்லு கூடத் தேய்க்காம இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தா? வாங்க, சாப்பிட" என்று அருமையுடன் அழைத்தாள் தங்கம்.

"இப்போ சாப்பாடு ஒண்ணுதான் பாக்கி" என்று சலித்துக் கொண்டார் முதலியார்.

"அதுக்காக? எல்லாம் திருச்செந்தூருக்கு நேத்திருக்கேன். நம்ம ஆறுமுகத்துக்கு ஒரு குறையும் வராது. வாங்க."

கைலாச முதலியார் இடத்தைவிட்டு எழுந்திருந்து தங்கத்தைப் பின் தொடர்ந்தார். வீட்டுக்குள் வந்ததும் திரும்பவும் ஏதோ மனம் மாறியவராகத் திடீரென்று நின்றார், தங்கம் அவரை அர்த்த பாவத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

"எனக்குச் சாப்பாடு வேண்டாம். பசியே இல்லெ. மச்சியிலே போய் இருக்கேன். டாக்டர் வந்தா கூப்பிடு" என்று சாவதானமாகக் கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றார் கைலாச முதலியார்.

கணவன் மேலே ஏறிச்சென்று மறைவதைக் கவனித்துக் கொண்டு நின்ற தங்கம் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுவிட்டு, ஆறுமுகத்தினருகே சென்றாள்; மணி ஆறுமுகத்துக்குப் பக்கத்தில் அமர்ந்து, "தம்பி, தம்பி, ஆறுமுகம்" என்று கூப்பிட்டு, அவனுக்குப் பிரக்ஞை மீளுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஆறுமுகம் லேசாக அசைந்து