பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


கொடுத்தான்; கண்ணைத் திறந்து பரக்கப் பரக்க விழித்தான்; அவனது முகத்தில் புதியதொரு களை தோன்றுவது போலிருந்தது.

"இந்த பாருடா ஆறுமுகம், அண்ணன் கூப்பிடுதான் பாரு" என்று பாசமெல்லாம் தோய்ந்து கலந்த வார்த்தைகளில் அருமையோடு பேசினாள் தங்கம்.

ஆறுமுகத்தின் முகத்தில் மெல்லிய புன்னகை வதங்கிச் சாம்பியது; அண்ணனையும் தாயையும் வெறித்து நோக்கினான். ஆனால் மறுகணமே அவன் கண்கள் ஏறச் சொருகின; வெள்ளை விழி பிதுங்கி பயங்கரமாகச் சுழன்றது; மூச்சு கொரகொரத்துத் திணறத் தொடங்கியது.

தங்கம் பதறினாள்.

"என்னடா இது? ஏண்டா இப்படி மயங்குதே? வயித்தை என்னமோ பண்ணுதேடா_ ஆறுமுகம். ஆறுமுகம்" என்று கலங்கிக்குழம்பிய குரலில் பரிதவித்தாள் தங்க ம்.

இந்தச் சமயத்தில் டாக்டர் வந்து சேர்ந்தார்; டாக்டரைக் கண்டதும் தங்கம்மாளின் கலங்கிய மனத்தில் சிறு தெளிவு, சிறு நம்பிக்கை பிறந்தது.

"டாக்டரையா, என் பிள்ளையைப் பார்த்து ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்கையா" என்று குழறினாள் தங்கம். பிறகு மணியிடம் திரும்பி, "மணி, அப்பாவைக் கூப்பிடு" என்று வேண்டிக் கொண்டாள். மணி எழுந்து அவசர அவசரமாக மாடிப்படி ஏறினான்.

. டாக்டர் மௌனமாகச் சென்று ஆறுமுகத்தின் கையைப் பிடித்துப்பார்த்தார்; மூக்கின் முன்னால் விரலை வைத்துப் பார்த்தார். ஆறுமுகத்தின் கை 'கொளக்'கென்று விழுந்தது.

"டாக்டர், டாக்டர்"என்று கத்தினாள் தங்கம்.