பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


திண்னையிலும் தரையிலுமாக உட்கார்ந்து, அந்தத் துக்ககரமான சம்பவத்தைப்பற்றிப் பேசி, தத்தம் மனப்பாரத்தைத் தணித்துக் கொண்டிருந்தார்கள்.

"இருந்திருந்து இவருக்கு இந்தக் கதி வந்திருக்க வேண்டாம். எவ்வளவு நல்ல மனுசன்!" என்று கூறினார் ஒரு நெசவாளி

"நல்ல மனுசினைத்தான் உலகத்திலே பிழைக்க விடுறதில்லையே. எல்லாம் அந்தப் பெரிய முதலாளியும், மைனர்வாளும் சேர்த்து செஞ்ச வேலையாலேதான் இவுக கதி இப்படியாச்சி!" என்று பக்கத்திலிருந்த வடிவேலு முதலியார் ஆத்திரப்பட்டுக் கொண்டார்.

வே, வீணா எதுக்கு அவுற பேரையெல்லாம் இழுக்கிய? என்னமோ கைலாசமுதலியார்வாளுக்கு விதிச்ச விதி அவ்வளவுதான்!' என்று அந்தப் பேச்சைத் தட்டிக் கழித்தார் சுப்பையா முதலியார்.

சுப்பையா முதலியாருக்குத் தக்கவாறு பதில் கொடுக்க வேண்டுமென்று வடிவேலு முதலியார் நினைத்தார். ஆனால் சந்தர்ப்பம் சரியில்லையென்பதை உணர்ந்து, தம் மனத்திலிருந்து துள்ளி வந்த பதிலைப் பல்லைக் கடித்து உள்ள முக்கிக் கொண்டு, "விதியாமில்லெ! என் வாயிலே என்னமாத் தான் வருது. என்று கூறியவாறே, சுப்பையா முதலியாரை முறைத்துப் பார்த்துக்கொண்டார்.

இதற்குள் இன்னொரு சிறு வியாபாரி, ஆழ்ந்த பெரு மூச்செறித்தவாறே, "என்னமோ, கைலாச முதலியார் கதை முடிஞ்சி போச்சி இருக்கிற நிலைமையிலே யாரார் கதி எப்படியாகப் போவுதோ? இனிமே நம்ம கதை என்னென்னைக்கோ?" என்று நீட்டி முழக்கிச் சலித்துக் கொண்டார்.

”பாவம், அந்தச் சின்னவனுமில்லெ செத்துப் போனான், மணிக்குப் பலத்த அடியாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காகளாம். கடைசி நேரத்திலே