பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143


'மணியும் அவன் தம்பியைப்போலவே ஒரே தினத்தில் மூன்று பேரா_ அதைப்போல் வேறு கோர பயங்கரமே கிடையாது! எல்லாம் என் தந்தையால் வந்த வினை! தந்தை மட்டும் தானா? எல்லாம் இந்த சர்க்காரால் வந்த வினை!. மணியின் உயிருக்கு. சேச்சே! அப்படியிருக்காது. அப்புறம் கமலா என்ன பாடுபடுவாள்? மணியைப் போன்ற நல்ல பையன் கிடைப்பானா? நல்ல சிநேகிதன் கிடைப்பானா? சங்கரின் மனம் நிலைகொள்ளாமல் அலைமோதிக் கொண்டிருந்தது.

அவனது மனப் போக்கின் வேகத்தைப் போலவே அவனும் ஓரிடத்தில் தரித்து நிற்க முடியாமல் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தான்.

திடீரென்று ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் கடப்பைக் கற்களின் மீது பூட்ஸ் காலின் சப்தம் 'டக் டக்' கென்று ஆரோகணித்து வரத் தொடங்கியது.

சங்கர் திரும்பிப் பார்த்தான்; டாக்டர் நடராஜன் வந்து கொண்டிருந்தார்.

"வணக்கம், டாக்டர்" என்று கூறியவாறே அவரை நோக்கிச் சென்றான் சங்கர்.

டாக்டரும் மறு வணக்கம் கூறிவிட்டு, "வாருங்கள் உள்ளே” என்று அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார்.

சங்கர் பரபரப்போடு அவருடன் சென்றவாறே, "டாக்டர் ஸார், மணிக்கு எப்படி இருக்கிறது? ஆபத்தில்லையே!"என்று கேட்டான்.

"பயமில்லை வாருங்கள், சொல்கிறேன்" என்றவாறே டாக்டர் உள்ளே சென்று தமது ஆசனத்தில் அமர்ந்தார்' சங்கர் அவருக்கு எதிராகக் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.