பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


சிறிது நேரத்தில் அந்தக் கார் ஆஸ்பத்திரி போர்டி கோவைலிட்டுக் கிளம்பிச் சென்றது.தாதுலிங்க முதலியாருக்குத் தப்பிப் பிறந்து விட்ட அந்த இளம்பிள்ளைகளைக் கண் மறையும் வரையிலும் வைத்த கண் வாங்காமல் வியந்து பார்த்துக் கொண்டு நின்றார் டாக்டர் நடராஜன்.


15

அன்று மாலை ஆறரைமணி நேரமிருக்கும்.

அம்மன் கோயில் மண்டபத்திலுள்ள வாசக சாலையிலும் கோயிலை அடுத்துள்ள மூப்பனார் வெற்றிலை பாக்குக் கடை முன்பும், அந்த வட்டாரத்திலுள்ள நெசவாளர்கள் பலர்கூடி நின்றார்கள். வடிவேலு முதலியார் மண்டபத்தில் உட்கார்ந்து கைரேகை மயங்கும் அந்த அந்தியிருட்டு வேளையில், ஒரு பத்திரிகையைக் கண்ணுக் கெதிரே பிடித்து, எழுத்துக்களை தடம் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தார். சுப்பையா முதலியார் மூப்பனார் கடைச் சரப்பலகையைப் பெஞ்சாக மாற்றிப் போட்டு தெருவைப் பார்க்க உட்கார்ந்தார்.

இப்போதெல்லாம் அம்மன் கோயில் முன்பு மாலை வேளைகளில் அதிகம் பேர் தென்பட்டு வந்தார்கள். வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவர்களில் சிலருக்கு உலக நடப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற புதிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது. எனவே, அவர்கள் அம்மன் கோயில் மண்டபத்திலுள்ள வள்ளுவர் வாசக மன்றத்துக்கு வந்து, வடிவேலு முதலியார் போன்றவர்களைப் பத்திரிகை படிக்கச் சொல்லி செய்திகளைத் தெரிந்து கொண்டார்கள். பத்திரிகையில் பட்டினிச் சாவுகளைப் பற்றியும் நெசவாளர் பற்றியும் செய்திகள் வரும்போது அவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஒரு ஆர்வமும்,தெரிந்து கொண்டபின் இன்னதெனப் புரியாது