பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


கொடுப்பதற்கும் மூப்பனார் முன் வருவதில்லை. ஏனெனில் காலணாவுக்கு வியாபாரம் நடந்தால் அது அவருக்கு ஒரு மகத்தான சாதனையாகப் பட்டது. நெசவாளிகளும் பொதுவாக வெற்றிலை வாங்கிப் போடுவதற்கு முன் வரவில்லை; ஏனெனில் அவர்களிருந்த நிலைமையில் வெற்றிலை பாக்குப் போடுவதுகூட தமது சக்திக்கு மீறிய, ஆடம்பரமான, அனாவசியமான செலவு என்றுபட்டது. சுருங்கச்சொன்னால், அந்தத் தெருவாசிகளுக்கு அங்குள்ள நெசவாளிகளுக்கு, காலணா நாணயம் மிகவும் அர்த்த புஷ்டியும், மதிப்பும் வாய்ந்த செல்வமாகி விட்டது!

அம்பாசமுத்திரத்திலுள்ள கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக நெசவுத்தொழில் செய்தும் வாழ்வில் முன்னேற்றமின்றி நித்ய மார்க்கண்டேயர்களாக வளர்ச்சியோ தேய்வோ இன்றி வாழ்ந்தும் வந்தவர்கள் அவர்களில் பெரும்பாலோர் குடியிருக்க ஒரு குச்சுவீடு அல்லது இரண்டு மரக்கால் விரைப்பாடு அல்லது மனைவியின் கழுத்தில் பத்துப் பதினைந்து பவுன் எடையுள்ள தங்க நகை போன்ற சொத்துக்கு அதிபதிகளாய் இருந்து வந்தவர்கள்; இருந்தாலும் வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களிலும் இந்தச் சொத்து அடகிலேயோ அல்லது ஒத்தியாகவோ இருந்துவரும்.அதுவும் இல்லையென்றால் வட்டிக்குக் கடன் கொடுக்கும் உண்டியல் கடைச் செட்டியாரிடம் குறைந்த பட்சம் இரு நூறு ரூபாய்க்காவது'பிராமிசரி நோட்' என்னும் வாக்குறுதிக் கடன்பத்திரம் "தாங்கள் விரும்பும் காலத்தில் தங்களுக்கோ, தாங்கள் வாரிசுதாரர்களுக்கோ, தங்கள் அத்தாட்சிபெற்றவருக்கோ, அசலையும்வட்டியையும் தந்து கணக்கைப் பைசல் செய்து இந்தப் பிராமிசரி நோட்டை வாபீல் பெற்றுக் கொள்வேனாகவும்" என்ற உறுதி மொழியோடு அவர்களது நபர் நாணமேனும் அடகு வைக்கப்பட்டிருக்கும். எனவே அவர்கள் சீர் சிறப்போடு இருந்து சாப்பிடும் பெருவாழ்வுக்கு ஆசைப்பட முடியாமலும் இருக்கின்ற வாழ்வு தரங்கெட்டுச் சிறுமை