பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


யடையாமலும், தாமும் தம் குடும்பமுமே பிரபஞ்சமாகக் கருதி, வரவினங்களைக் கோடு கிழித்து வரம்பு கட்டிச் செலவழித்து வருவார்கள். குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுவது போல், 'தொட்டுக்கொள், துடைத்துக்கொள்' என்றிருக்கும் இந்த நிதி நிலைமைக்குள்ளேயே தம் ஆயுளையும் தம் குடும்பத்தாரின் கூட நலன்களையும் பாதுகாக்கும்யோகசாதனையைத்தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயின்றுவந்தார்கள். எனவே அவர்கள் அரசியல் என்னும் வம்பு தும்புக் கோ, விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் போல் தொழிற்சங்கப் போராட்டம் என்னும் அடாபிடித்தனத்துக்கோ ஆளாகாமல் தாம் உண்டு தம் வீடு உண்டு' என்று பொது வாழ்க்கையைப் பற்றிய நிர்விசாரத்தோடும், பற்றின்மையோடும் இருந்து வந்தார்கள். எனவே அவர்கள் தமது தொழிலில் கூலி உயர்வு அல்லது சலுகைகள் பெறவேண்டு மென்றாலும் முதலாளிமார்களை அடுத்தவனுக்குத் தெரியாமல் காக்காய்பிடித்துத்தாஜாசெய்தவன் மூலமோ, அல்லது ஒருவனுக்கொருவன் அந்தரங்கமாகக் கோள் சொல்லி தத்தம் சுயகாரியத்தைச் சாதித்துக் கொள்வதன் மூலமோதான் பெற முனைவார்கள். அல்லது சமூகத்தில் நாலு பேர் துணிந்து முன் வந்து கூலி உயர்வுக்காகப் போராடும்போது அவர்களோடு சேர்ந்து போராடாமல் விலகியிருந்து, அவர்கள் வெற்றி பெற்றால் பங்குக்கு முந்துவதும் தோல்வி கண்டால் "நான் தான் அப்பவே சொன்னேனே" என்று வாய் விட்டுக் கூறி, தமது புத்திசாலிதனத்தை விளம்பரப் படுத்திக்கொள்வதும் ஆன ராஜ தந்திரத்தின் மூலமோதான் சாதித்துக்கொள்ள முயல்வார்கள்.

இதுதான் அங்கு நிலவிவந்த பொதுவான வாழ்க்கை முறை ஆனால் சமீப காலத்திலோ இந்த வாழ்க்கை பல்வேறு விதத்திலும் தகர்ந்து உருமாறிப் போய்விட்டது. இப்போதோ அவர்கள் எல்லோருக்கும் பிழைப்புக் கெட்டுவிட்டது லோகமே. புரண்டு

வந்தாலும் தம்