பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


தொழிலுக்கு மோசமில்லை என்று பரம்பரை பரம்பரையாகக் கருதி வந்த அவர்கள் எண்ணத்தில் இடி விழுந்து விட்டது. வியாபாரிகள் எல்லோரிடத்திலும் கைத்தறி ஜவுளி தேங்கிப் போய் விட்டதால் விற்பனை மந்தமாகிவிட்டது. எனவே வியாபாரிகள் சரக்கைக் கொள்முதல் செய்யவே தயங்கினார்கள்.தறிகாரர்களும் எப்போதாவது நூல் கொடுத்து நெய்து வாங்க முன் வந்தார்களேயன்றி நிரந்தரமாக நூல் கொடுக்க முன்வரவில்லை அவர்களால் முடியவுமில்லை . இதனால் தறிகள் நாட் கணக்கில் தூங்குவதும், ஒன்றிரண்டு நாள் விழித்திருந்து இராப்பகலாய் ஓடி அமருவதுமாக இருந்தன. எனவே கைத்தறி நெசவாளர்களின் வரும்படி குறைந்து விட்டது. மேலும், நூல் விலை உயர்லாலும், மில் துணி போட்டியாலும், மக்களிடம் பணப் புழக்கம் குறைந்து விட்டதாலும், அதிக விலை கொண்ட கைத்தறி ஜவுளிகள் விற்பனையாகவில்லை. கைத்தறித் துணியை மக்களிடம் விற்க வேண்டுமென்றால்‌ அதன் அடக்க விலையைச் சாத்தியமான அளவுக்குக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வியாபாரிகளுக்கும், மாஸ்டர் வீவர்களுக்கும் ஏற்பட்டது. நூல் விலையைக் குறைக்க வழி செய்து அடக்க விலையைக் குறைக்கவழியிருந்தால் ஜவுளி ஓரளவேனும் விலைபோகும். ஆனால் சர்க்காரின் ஜவுளிக்கொள்கையோ நூல்விலையை எந்த விதத்திலும் குறைக்கக் கூடியதாயில்லை. இதனால் வியாபாரிகள் அடக்க விலையைக் குறைப்பதற்கு நெசவாளிகள் தலையில்தான்கைவைத்தார்கள். வேலைகேட்டுப் பல்லெல்லாம் தெரிய நிற்கும் நெசவாளியின் நெருக்கடியைப் பயன்படுத்தி "வேணுமின்னா, நான் தர கூலிக்கு நெய்து கொடும்" என்று வேண்டா வெறுப்பாகச் கூறி நெசவாளிகளுக்கு வேலை கொடுத்துக் 'காப்பாற்றும்' புண்ணிய கைங்கரியத்தில் ஈடுபட்டார்கள் வியாபாரிகள். நெசவாளிகளும் கிடைக்கிற காசுக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாதேயென்று "நீயே என்னை முழுங்கிடு"என்று சொன்ன சோலகோவின் குஞ்சு மீனைப்போல், குறைந்த கூலிக்குத்