பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


வயது முதிர்ந்த நெசவாளி தமது அனுபவத்தைச் சூத்திர வடிவாக்கினார்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, சங்கர் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான்.

சங்கரைக் கண்டதும், வடிவேலு முதலியாரை ஆதரித்துப் பேசிய நெசவாளி, சங்கரைச் சுட்டிக் காட்டி, "இவன் இன்னும் என்னென்ன கூத்துக்கு வாரானோ? இவனும் அவருக்குப் புறந்தவன்தானே!" என்று தம் பக்கத்திலிருந்தவரிடம் மெதுவாகக் கூறினார்.

இதற்குள் வடிவேலு முதலியார் குறுக்கிட்டு, "சேச்சே! தம்பியை அப்படிச் சொல்லாதிங்க. இவன் என்னமோ அந்தக்குடும்பத்திலே தப்பிப் பிறந்துட்டான்.இவன்தானே கைலாச முதலியார் செத்த அன்னிக்கு செலவுக்கில்லாம் பணம் கொடுத்துஒத்தாசையாஇருந்தான். இவனைப்போல தங்கமான பிள்ளையைப் பார்க்க முடியுமா?" என்று புகழத் தொடங்கினார்,

"அப்படியா?" என்று மூக்கின்மீது விரலை வைத்து வியந்தார் அந்த முதியவர்.

இதற்குள் சங்கர் வந்து சேர்ந்துவிட்டான்.

சங்கரைக் கண்டதும் வடிவேலு முதலியார் 'என்னப்பா சங்கர்? எங்கேயிருந்து வாரே?" என்று அருமையோடு கூப்பிட்டார்.

"ஆஸ்பத்திரியிலேயிருந்து" என்று பதில் கூறியவாறே அருகில் வந்தான் சங்கர்.

"ஆமா,மணிக்கு எப்படி இருக்கு"

"தேவலை."

"என்ன சங்கர், உன் தகப்பனார் செஞ்ச வேலையைப் பாத்தியா? ஒரு குடும்பமே பாழாப் போச்சு!" என்று ஆவலாதி கூறுவதற்கு முந்திக் கொண்டார் முதியவர்.