பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கர் அந்தக் குரலில் தொனிந்த திக்கற்றதன்மையை உணர்ந்து கொண்டே, "மாறும், மாறும் நீங்க எல்லாரும் மனசு வச்சா!" என்று பதில் கூறினான்.

"விளங்கச் சொல்லு, தம்பி அழிப்பாங்கதை போடுதியே" என்று அந்த முதியவர் கேட்டுக் கொண்டார்.

"தாத்தா, உங்க கஷ்டம் இருக்கே, இது அவ்வளவு லேசிலே தீருகிற விஷயமில்லே. இந்த சர்க்காரோடே ஜவுளிக் கொள்கை மாறினால் ஒழிய, நிலைமை மாறப் போறதில்லை. அதுதான் சொன்னேன்" என்றார் சங்கர்.

"அப்படின்னா ?", என்று கேட்டு நிறுத்தினார், வடிவேலு.

சொல்கிறேன். ஒரு தாதுலிங்க முதலியார் தான் கைலாச முதலியாரின் பிழைப்பைக் கெடுத்தாரா? இந்த நாட்டிலுள்ள எத்தனை எத்தனையோ தாதுலிங்க முதலியார்கள் நூலைக் கள்ள மார்க்கட்டில் விற்றுக் கொள்ளையடிக்கும் பணக்காரர்கள், எத்தனையோ குடும்பங்களை நாசமாக்கவில்லையா? நீங்களும்தான் பேப்பர் பார்க்கிறீர்களே, இன்னிக்கு எத்தனை நெசவாளிக் குடும்பங்கள் சீரழிந்து தெருவில் நிற்கிறார்கள்; பிச்சை எடுக்கிறார்கள்! நமது பெண்கள் தங்கள் மானத்தையே விற்கிறார்களே. இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஊராரின் மானத்தையெல்லாம் காப்பதற்காக, நீங்கள் துணி நெய்து கொடுத்தீர்கள். ஆனால் இன்று உங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கு வழி இருக்கிறதா?

சங்கரின் கேள்வி அங்கிருந்தநெசவாளிகள் அனைவர் மனதிலும் புதியதொரு ஒளியைப் பாய்ச்சியது. தங்கள் தொழிலின் மேன்மையையும், அந்த சமயம் தாங்கள் அடைந்துள்ள தாழ்வையும் பற்றி அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் கர்ப்போட்டம் போன்று ஒரு உணர்ச்சி சில்லிட்டுப் பரவுவதை அவர்கள் உணர்ந்தார்கள். குன்றிக்