பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176


 அதற்குள் ஆஸ்பத்திரி நர்ஸ் வந்து மணிக்குப் பிரக்ஞை திரும்புவதாகத் தெரிவித்தாள்; டாக்டர் அவசரமாக எழுந்து, "சங்கர் இங்கேயே இருங்கள். நான் இதோ வந்துவிடுகிறேன்" என்று சொல்லியவாறே நர்ஸைப் பின் தொடர்ந்தார்...

'ஆம். மணி சொப்பன வாழ்க்கைதான் வாழ்ந்தான்' என்று முனகியது சங்கரின் சிந்தனை. அதைத் தொடர்ந்து மாணியின் வாழ்க்கை அவள் கண்முன் விரிந்தது....

மணி பணக்காரனின் பிள்ளையாகப் பிறக்காவிட்டாலும், சுகபோகியாக எந்தவிதக் கவலையும் அற்றுத்தான் வாழ்ந்தான். கைலாச முதலியார் நெசவாளி என்ற நிலைமையிலிருந்து சிறு வியாபாரி என்ற நிலைக்கு உயர்ந்தது வரை மணிக்கு வாழ்வில் எவ்விதக் குறையும் இல்லை. அவனுக்கு அறிவு வந்தது முதல் அவன் வாழ்க்கைக் கவலைகள் எதுவுமின்றித்தான் வாழ்ந்தான். கைலாச முதலியாரும் மூத்த மகன் என்ற பாசத்தால் அவனுக்கு எவ்விதக்குறைவும் இல்லாமல்தான் பார்த்து வந்தார். மணி படிப்பில் கெட்டிக்காரன்தான்; எனினும் அவன் தன் படிப்பைத் தவிர, தன் சொந்தச் சுகதுக்கங்களைத் தவிர, வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டான். என்னவோ தான் உண்டுதன் படிப்பு உண்டு என்று இருப்பவன் போலத் தோற்றுவான். சங்கர் எப்போதாவது அவனிடம் அரசியல் அல்லது பொது விஷயங்களைப் பற்றிப் பேசினாலும்'அதெல்லாம் உனக்குச் சரி' என்று சொல்லி, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுவான்.

உலகப் பிரச்னைகளில் அவன் கவனம் எப்படித் திரும்பவில்லையோ, அதுபோல் அவனுக்குத்தன் உள் வீட்டு நிலைமைகளிலும் கவனம் கிடையாது. தன் தந்தையின் வியாபாரம் நாளுக்குநாள் கணித்து வந்ததைக்கூட அவன் உணரவில்லை. அதனால்தான் ஒருநாள் அவன் ஸீஸன் டிக்கட் எடுப்பதுபற்றி, தந்தையிடம் நடத்திய வாக்கு