பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


மில்லுக்கு எதிராக, அந்த மில் அமைந்திருப்பது விஸ்வரூப ராட்சதனுக்கு எதிரே, நாபிக் கொடி காய்ந்து விழாத பச்சிளங் குழந்தை தவழ்ந்து விளையாடத் துணிவது மாதிரித்தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது.

தாமிரபருணித் "தாயிடமிருந்து முதல் பாசன் ஊட்டத்தைப்பெறும்பாக்கியம் பெற்றது அம்பாசமுத்திரம். எனவே, எந்தக் காலத்திலும் அந்த வட்டாரத்தில் தீய்வோ, தண்ணீர்த்தட்டோ இருந்ததில்லை. ஊரைச் சுற்றிலும் பல மைல் விஸ்தீரணத்துக்கு பச்சைப் பசிய நெல்வயல்கள் மரகத மைதானமாக விரிந்து கிடக்கும். திருநெல்வேலி ஜில்லா ஒரு பற்றாக்குறைப் பிரதேசம்தான்; என்றாலும் அம்பாசமுத்திரத்தைப் பொறுத்த வரை அது ஒரு பற்றாக்குறைப்பிரதேசம் அல்ல. எனினும் இந்தியாவெங்கும் உள்ளது போலவே, அங்கிருந்த நிலங்களில் பெரும்பகுதி நேரடியாகவிவசாயம் செய்யும் விவசாயப் பெருமக்களுக்குச் சொந்தமானதல்ல. பெருவாரி நிலங்கள் கல்லிடைக்குறிச்சி பெரிய ஐயன்மார்கள் என்ற பார்ப்பன நிலப்பிரபுக் களுக்கும், சைவ ஆதீன மடங்களுக்கும், ஒருசில பண்ணையார்களுக்கும், பற்பல சிறு நிலச் சொந்தக்காரர் களுக்கும் உடைமையாயிருந்தன. விவசாயிகள் பெரும் பாலும் நிலச்சுவான்தார்களிடம் நேரடிப் பாட்டத்துக்கு எடுத்தோ, அல்லது ஆதீன மடங்களைச் சேர்ந்த தரகுப் பிள்ளைமார்களிடம் குத்தகைக்கு எழுதி வாங்கியோ பயிர் செய்வதுதான் நடைமுறை வழக்கமாய் இருந்து வருகிறது. 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது' என்றபழமொழிக்கு இலக்கணமாக, நாளுக்குநாள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவின் சூழ்நிலையில் எங்குமுள்ளது போலவே அங்குமுள்ள விவசாயிகளின் வாழ்க்கைசீரழிந்து வருகிறது. '

அம்பாசமுத்திரம் ஊரைப் பொறுத்தவரையிலும் அது தாலுகாக் கச்சேரியும் பஞ்சாயத்து போர்டு ஆபீசும் அடுத்தடுதுள்ள இரண்டுங் கெட்டான் நகரம்; அதாவது