பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


வளர்ச்சியுற்ற கிராமம், சர்க்கார் கச்சேரிகள், பஸ், ரயில் போக்குவரத்து முதலிய நிலைமைகளால், அந்த ஊர் வளர்ந்து வரும் சிறு நகரப்புறம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கும். ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயப் பெருங்குடி மக்கள், அன்றாடக் கூலிகள், சிறு தொழிற்காரர்கள் முதலியோர்தாம் சர்க்கார் உத்தியோகம், சிறு வியாபாரம், கமிஷன் ஏஜண்ட், பள்ளி ஆசிரியர் முதலியவர் போன்ற மத்தியதர வர்க்கத் தொழில் புரியும் மக்களும் ஏதோவசதியாய்உட்கார்ந்து சாப்பிடவழியுள்ள நிலச்சுவான்தார்களும் ஊரின் பிரதான குடிமக்கள். இவர்களைத் தவிர, ஊரின் ஒரு பகுதி முழுவதும் பரம்பரை: பரம்பரையாகத் தறி நெய்து ஜீவனோபாயம் தேடி அதில் வாழ்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமானகைத்தறிநெசவாளர் சமூகமும் அங்குண்டு. கைத்தறி நெசவாளர்களில் பெரும்பாலோர் வெள்ளை வேட்டிப் பண்டாரங்களான கடைத் தட்டுமத்தியதர வர்க்கத்தார் தாம். ஒருசிலர் மட்டும் ஜவுளிக்கடை நடத்தும் முதலாளிமார்களாகவும், மாஸ்டர் வீவர்களாகவும் நூல் வியாபாரிகளாகவும் இருந்து வந்தனர்.

சுருங்கச்சொன்னால், அம்பாசமுத்திரம் விட்டகுறை தொட்ட குறையாகவுள்ள அரைகுறை அடிமை நாட்டின் அனுபவ சித்திரமாக விளங்கி வருகிறது. ஒரு புறம் வர்க்க போதம் பெற்று, பற்பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்ட ஹார்வி மில் தொழிலாளி வர்க்கம்; இன்னொரு புறம், அகழியில் விழுந்த முதலையைப்போல் தன்னுள்தானே வாழ்ந்து கொண்டு, என்றோ ஒருநாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் பொத்துக்கொண்டு வரத்தான் போகிறது என்ற அசட்டு நம்பிக்கையின் அஸ்திவாரத் திலேயே நாட்களைக் கடத்தும் நெல்லிக்காய் மூட்டை போன்ற, ஊசலாட்ட மனப்பான்மை கொண்ட சிறு முதலாளிகள், கைத்தறி நெசவாளிகள், சிப்பந்திகள் முதலியோர் கூட்டம் ஒரு புறம் பகாசுரப்பசியோடு இரவும் பகலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஹார்வியின் பஞ்சாலை; மறு புறத்தில் முக்கித்