பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207


உருமாறும் வேளையில், அந்த ஸெர்விஸ் பஸ் பாளையங்கோட்டை லெவல் கிராஸிங்கைத் தாண்டி, ஊருக்குள் பிரவேசித்தது.

ஸ்டாண்டுக்குள் வந்து பஸ் நின்ற போதுதான் மணியின் ஆன்ம விசாரம் அறுபட்டது; ஊர் வந்துவிட்டதை மணி உணர்ந்தான். பஸ்ஸை விட்டு பிரயாணிகள் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். எல்லோரும் இறங்கியவுடன் தான் மணிக்குத் தானும் இறங்க வேண்டும் என்ற உணர்வே வந்தது. அவனுக்குத் தன்னைச் சுற்றிக் குழுமியிருந்த ஒரு சிறு பிரபஞ்சமே திடீரென்று சிந்திச் சிதறிப் போய் விட்டது போல் இருந்தது; அந்தக் கார் ஓரிடத்திலும் நிற்காமல் தன்னைச் சுமந்து கொண்டே, காலமெல்லாம் ஓடிக் கொண்டிருந்தாலென்ன என்று அசட்டுத்தனமாய் எண்ணிப் பார்த்தான் மணி. திடீரென்று பிரத்தியட்ச உலகுக்குள் குதித்துத் தன்னுணர்வு பெற்று இயங்குவதற்கு அவனுக்குச் சிரம சாத்தியமாயிருந்தது. வேண்டா வெறுப்பாகக் காரை விட்டு இறங்கினான்; திடீரென அவன் மனத்தில் ஒரு நிராதரவுணர்ச்சி தலை தூக்கியது.

"இனி என்ன செய்வது? எங்கு செல்வது?"

பஸ் ஸ்டாண்டிலேயே நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தவனாக, வெளியே புறப்பட்டான். வெளியே வந்ததும் எதிரேயுள்ள காப்பி ஹோட்டல் போர்டு அவன் கண்ணை இழுத்தது. ஹோட்டலைக்கண்டதும் மணிக்குப்பசியெடுப்பது போல் இருந்தது. ஹோட்டலுக்குச் செல்லுமுன் மணி தன் பையில் கை விட்டு அதிலிருந்து பணத்தை எடுத்துப் பார்த்தான் ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பும் போது அவன் தன் சட்டைப் பையில் நோட்டும் சில்லறையுமாகப் பணம் இருப்பதைக் கண்டும் அந்தப் பணம் எப்படி வந்தது என்று சிந்திக்கவில்லை. தனக்கு உதவ வந்த சமய சஞ்சீவியாகத்தான் அந்தப் பணத்தைக் கருதினான். அவனுக்கிருந்த