பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209


மணி அந்தப் பிச்சைக்காரனையும் நாயையும் எச்சில் இலை போடும் தொண்டின் வழியாகப் பார்த்தான். முன்பெல்லாம் இது போன்றதொரு நிகழ்ச்சி மணியின் மனத்தில் எந்தவிதச் சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை; இப்போதோ அவன் மனத்தில் தோன்றிய அருவருப் புணர்ச்சியையும் மிஞ்சி, ஒரு அனுதாப உணர்ச்சி மெல்லத் தலை தூக்கியது. மணி ஒன்றும் பேசாமல், அந்தப் பிச்சைக்காரனை நோக்கி இலையை விட்டெறிந்தான்.

இலை கீழே தவறி விழுந்தது; மறு கணமே அந்தப் பிச்சைக்காரனும் நாயும் அந்த இலைக்காகப் பாய்ந்து விழுந்து போராட முனைவதையும் மணி கண்டான்!

மறு கணமே மணி அங்கு நிற்க மனமில்லாமல் ஹோட்டலைவிட்டு வெளியேறினான்.

"சே! எச்சில் இலைக்கா இந்தப் போட்டி; அந்த நாய்க்குத் தான் அறிவில்லை. அந்தப் பிச்சைக்காரனுமா அப்படி? இவ்வளவு கேவலமாகவா வயிறு வளர்க்க வேண்டும்? இதை விட எங்கேனும் விழுந்து சாகலாமே!..."

மணி அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சிந்தித்தவனாக, டவுண் பஸ் ஸ்டாப்புக்கு நடந்தான்.

வண்ணார்பேட்டையில் மணி எதிர்பார்த்தபடியே அந்த நண்பன் தன் அறையில்தான் இருந்தான். மணியைக் கண்டதும், அவன் அவனை ஆவலோடு வரவேற்றான்.

"என்ன மணி, ஏது இங்கே ? அபூர்வமா? காலம். காத்தாலே!"

"ஒன்றுமில்லை. குடும்ப விஷயமா வந்தேன். நாளைப் போகணும்."

மணி அன்று அங்கு தங்கினான்.

அப்போது கல்லூரி விடுமுறைக் காலமாதலால், மணியின் நண்பனும் எங்கும் செல்லவில்லை. தான் மட்டும்