பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216


"தற்கொலை செய்து கொள்வதா? எப்படிச் செய்வது? ஆறு குளம்.ரோட்டடிப் புளிய மரம் ஒரு துளி விஷம் ஓடுகின்ற ரயில் எப்படிச் செய்வது? ஆமாம் நாளைக்குத் துணிந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் ரயிலில் விழுந்து. அதுதான் சரி. துணிந்துவிட வேண்டியதுதான். அவ்வளவுக்குத் தைரியமில்லையா."

பாளையாங்கோட்டை ஊசிக் கோபுரக் கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்து அடங்குவது அவன் காதில் தெளிவாகக் கேட்டது,வயற்காட்டில் விடாது முணமுணத்துக் கொண்டிருக்கும் தவளைகளின் சத்தமும் அவனுக்குக் கேட்டது.

மணி யோசித்தான்; தற்கொலையைப் பற்றிக் கற்பனை பண்ணுவது அவனுக்கு இன்பம் தருவதாகவும், நிவர்த்தியுணர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது....

'நாளை இந்தக் கடிகார ஓசையை நான் கேட்க மாட்டேன்; இந்தத் தவளைகளின் முணுமுணுப்பு என் காதில் விழாது. நாளை நான் இறந்து போய் விடுவேன். காலையில் மேற்கே இருந்து வரும் ரயிலுக்குக் குறுக்கே விழுந்து உயிரை விட்டுவிட வேண்டியதுதான். கூண நேரத் துணிச்சல். அதுவுமா என்னிடமில்லை ...?"

அவன் மனம் மறு நாளையக் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்தது...

ரயில் கடகடத்து ஓடிவருகிறது; மணி நெஞ்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு தண்டவாளத்தின் மீது படுத்திருக்கிறான்; ரயில் இதோ வந்துவிட்டது; இதோ, இதோ. மணி கண்களை இறுக்கி மூடுகிறான் சடசட என்று மண்டை நொறுங்கும் சப்தம்!. ஓடிச் சென்ற ரயில் கிரீச்சிட்டு பிரேக் போட்டு நிற்கிறது! கார்டும், ஜனங்களும் இறங்கி ஓடி வருகிறார்கள்!.... ரத்தக்களரி!"