பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249


உங்களுக்கு தான் ரொம்பவும் கடமைப்பட்டவன்" என உணர்ச்சி ததும்பச் சொன்னான்.

"நாங்கள் தான் உங்களுக்குக் கடமைப்பட்டவர்கள், இத்தனை பசிக் கொடுமையிலும் எங்கள் ஊர்வலத்தில் கலந்து உங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் காட்டிக் கொண்டீர்களே. நான்தான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்" என்று தன்னடக்கத்தோடு கூறிக் கொண்டார் ராஜு.

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு காரியதரிசி ராஜு அவனை நோக்கிக் கேட்டார்.

”உங்களுக்கு இந்த ஊர் தானா?”

"இல்லை, அயலூர். பிழைக்கலாம் என்று வந்தேன்.' வந்த இடத்திலே..." அவன். பெருமூச்செறிந்தான்.

"உங்கள் பெயர்?

"மணி".

மணிக்குப் பசி வேதனை தணிந்து விட்ட போதிலும் எய்ப்பும் களைப்பும் குறையவில்லை. அவனது ஆயாசம் முகத்தில் வியர்வைத் துளிகளாகத் துளித்தது. அவனது ஆயாசத்தைக் கண்டுணர்ந்த ராஜு அவனை நோக்கி, "உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. பேசாது படுத்துத் தூங்குங்கள், பிறகு பார்க்கலாம்" என்று கூறியவாறு, ஒரு ஊழியரை, காரியாலயத்தின் ஒரு பகுதியில் மணிக்குப் படுக்கை விரித்துப் போடச் சொன்னார்.

மணி உள்ளே சென்று படுத்துக்கொண்டான்.

ராஜு தம்மைச் சூழ்ந்து நின்ற நெசவாளர் ஊழியர்களை நோக்கி, "எல்லோரும் போய்ச் சாப்பாட்டை முடித்து விட்டு, பத்துமணி சுமாருக்கு வந்து சேருங்கள். அந்த ரிப்போர்ட்டைக் குறையும் முடித்து விடலாம் என்று கூறினார்.