பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


“லாபம் இல்லாமலா, அண்ணாச்சி" என்று பொடி வைத்துச் சிரித்தார் சுப்பையா.

“என்ன, என்ன சொன்னே?" மைனர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“அண்ணாச்சி, அவர் இப்படித் தறிகாரர்களுக் கெல்லாம் சாதகமா நடந்து அவங்களையெல்லாம் கைக்குள்ளே போடப் பார்க்கிறாரு. எல்லாம் உங்களுக்கு எதிரிடையாத்தான்!"

"எனக்கு எதிராகவா? அப்படின்னா ?" என்று வியந்தார் மைனர்.

"ஒண்ணுமில்லே. நீங்க அம்மன் கோயில் தர்மகர்த்தாவா இருக்கது அவரு கண்ணை உறுத்துது போலிருக்கு. அவரே இந்த வருசம் தர்மகர்த்தா ஆகணும்னு கொடி கட்டிக்கிட்டுத் திரியிறாரு.அதுதான் அவர் இப்படிப் படை திரட்ட ஆரம்பிச்சிருக்காரு."

"ஊஹும்" என்று இளங்கோபத்தோடு உறுமிக் கொண்டார் மைனர். .

“அண்ணாச்சி, பரம்பரையா வியாபாரம் பண்ணிப் பணக்காரனாயிருந்தா இந்த அற்ப ஆசையெல்லாம் தோணுமா?சண்டைக்கிமின்னாலே அவரும் தறிக்குழியிலே கிடந்து லொக்கடி லொக்கடின்னு நெஞ்சவர்தானே அண்ணாச்சி.”

"சரிதான்" என்று ஒருவார்த்தையைப் போட்டுவிட்டு ஏதோ யோசித்தார் மைனர்.

"அண்ணாச்சி, நீங்க எவ்வளவு காலமாகத் தர்மகர்த்தாவா இருக்கீஹ. இப்ப உங்களைத் தள்ளிட்டு அவர் வாரதுன்னா, அது நல்லாருக்கா? நம்ம குடும்ப கௌரவம் என்னாகிறது?”

"சுப்பையா!” என்று அடக்கமாகக் கூப்பிட்டார் .