பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


என்று பயந்து பேச்சை மாற்றமுயன்றார். "அது சரி, தம்பி மணி இங்கே வந்து எத்தினி நாளாச்சு?"

"எத்தினி நாளா? அஞ்சாறு மாசமிருக்கும்!" என்று பதிலளித்தார் முதல் நபர்.

உடனே அந்தப் பீடி ஆசாமி பதில் சொன்னார்; "அவர் வந்து இத்தனை நாளைக்குள்ளே, எப்படி நல்லா உழைக்கிறார், பார்த்தீங்களா?"

அவரது பாராட்டைக் கேட்டதும் அவர்கள் அனைவரது பேச்சும் மணியைப் பற்றித் திரும்பின.

"அது மட்டுமா? அவர் நம்ம பிரச்சினைகளையெல்லாம் நல்லா விளக்கி வேறே சொல்றாரு."

"பின்னே அவரும் நம்ம மாதிரி ஒரு நெசவாளிக்குப் பிறந்தவர் தானே. அத்தோட அவரு பட்ட கஷ்டங்களே அவருக்குப் பாடம் சொல்லிக் குடுக்குமே. அவர் கதையை நாமளும் தான் கேட்டோமே"

"அதுமட்டுமில்லை. நம்ம ராஜு அவர் விசயத்திலே தனி அக்கறை செலுத்திக் கவனிக்கிறார். ராப்பகலா அவரோட விவாதம் பண்ணி, எல்லா விசயத்தையும் சொல்லிக் குடுக்காருல்லெ!"

சிறிது நேரம் வரையில் அவர்கள் மணியின் திறமையையும் முன்னேற்றத்தையும் பற்றித் தத்தம் அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்; அதற்குள் பீடியும் தீர்ந்து விட்டதால், பீடி குடித்தவர், ”சரி வாங்க தம்பி, உள்ளே போகலாம்" என்று கூறியவாறு பீடிக் கட்டையைத் தூர எறிந்துவிட்டு உள்ளே நடந்தார்.

உள்ளே அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹரிக்கேன் விளக்கைச் சுற்றி, சிலநெசவாளிகளும், மணியும் உட்கார்ந்திருந்தனர், மணியின் முன்பு ஒரு நோட்டுப் புஸ்தகம் விரிக்கப்பட்டுக் கிடந்தது. அந்த ஹரிக்கேன் விளக்கின் ஒளியில், அங்கிருந்தவர்களின் நிழல்கள்